சைலண்ட் படங்கள்... வயலண்ட் பொண்ணு - கவர்ச்சி காட்டும் சாய் பிரியங்கா ருத்

சென்னை: சாய் பிரியங்கா ருத் தற்போது விதவிதமான போஸ்களில் போட்டோ சூட் எடுத்து அதை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அதில் அவர் நேற்று பதிவிட்ட புகைப்படம் ரசிகர்களை கவர்ந்துள்ளது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகிவருகிறது.

தற்சமயம் பிரபலமான நடிகைகள், சினிமாவிலோ அல்லது தொலைக்காட்சியிலோ வாய்ப்பு இல்லை என்றால், உடனடியாக தங்களை கிளுகிளுப்பாக போட்டோ சூட் தயார் செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றுவது தான். சில நாட்களுக்கு முன்பு ஜோக்கர் நாயகி ரம்யா பாண்டியன் போட்டோ சூட் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றினார்.

அன்றைக்கிருந்து அவர் ரொம்ப பிசியாகிவிட்டார். அவரைத் தொடர்ந்து ஹன்சிகா மொத்வானியும், நிக்கி கல்ராணியும் போட்டோக்களை எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். அந்த வரிசையில் தற்போது நடிகை சாய் பிரியங்கா ருத் இணைந்துவிட்டார்.

சீரியல் நாயகி

சீரியல் நாயகி

சூது கவ்வும் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் எண்ட்ரி கொடுத்த நடிககை சாய் பிரியங்கா ருத், பிறந்து வளர்ந்து கொங்கு தேசத்தின் தலைநகரான கோயம்புத்தூரில் தான். தொலைக்காட்சி சீரியல்களில் வாய்ப்பு கிடைத்ததும் சென்னையிலேயே தங்கிவிட்டார். இவர், முதன் முதலில் சன் டிவியில் ஒளிபரப்பான கேளடி கண்மணி சீரியலில் தான் அறிமுகமானர். தொடர்ந்து ஜீ தமிழில் ஒளிபரப்பான பூவே பூச்சூடவா மற்றும் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாணமாம் கல்யாணம் சீரியலிலும் துணை கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.

டான்ஸ் நிகழ்ச்சி

டான்ஸ் நிகழ்ச்சி

இவர் சன் தொலைக்காட்சியில் கிராமத்தில் ஓரு நாள் நிகழ்ச்சியிலும் பங்கேற்றவர். டான்ஸ் ரியாலிட்டி ஷோவானா டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் கலந்துகொண்டுள்ளார். இவர் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துக்கொண்டு இருக்கும் போதே சினிமா வாய்ப்பு தேடிவந்தது.

கேங்ஸ் ஆப் மெட்ராஸ்

கேங்ஸ் ஆப் மெட்ராஸ்

அதைப் பயன்படுத்தி அவர் சூது கவ்வும், மெட்ரோ, எனக்கு வாய்த்த அடிமைகள் போன்ற திரைப்படங்களில் சிறிய வேடங்களில் நடித்திருக்கிறார். 2018ஆம் ஆண்டு இயக்குனர் சி.வி.குமார் இயக்கிய கேங்ஸ் ஆப் மெட்ராஸ் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆனார். இந்த திரைப்படத்தில் அவரது நடிப்புத் திறமையை பார்த்து ரசிகர்கள் வியர்ந்தனர். ஆனால் இந்த திரைப்படம் வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை. பிரியங்கா வெவ்வேறு வகை திரைப்படங்களில் பணியாற்றி, தன்னைத்தானே பரிசோதனை செய்துக்கொள்கிறார்.

கவர்ச்சி புகைப்படங்கள்

சமீப காலமாக சாய் பிரியங்கா ருத் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். பார்க்க சைலண்ட் ஆக இருந்தாலும் ரொம்ப வயலண்ட் பொண்ணாக இருக்கிறார் சாய் பிரியங்கா ருத். கோயம்புத்தூரில் பிறந்து வளர்ந்த இவர் அல்ட்ரா மாடர்ன் ஆக போஸ் கொடுத்துள்ளார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் நேற்று பதிவிட்ட புகைப்படம் ரசிகர்களை கவர்ந்து வைரல் ஆகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X