twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தொடரும் ஜெய்பீம் பிரச்சனை.. சூர்யா, ஜோதிகாவுக்கு திடீர் சிக்கல்.. மொத்த வழக்கு விபரம் இதோ!

    |

    சென்னை: சூர்யா, ஜோதிகா தயாரிப்பில் இயக்குநர் டி.ஜே. ஞானவேல் இயக்கத்தில் வெளியான ஜெய்பீம் திரைப்படத்தில் வழக்கறிஞர் சந்துரு கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா நடித்திருந்தார்.

    இந்த திரைப்படம் வன்னியர்களை இழிவுபடுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ளதாக பாமகவினர் மற்றும் வன்னிய சங்கங்களை சேர்ந்தவர்கள் பெரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்நிலையில், ருத்ர வன்னியர் சேனாவை சேர்ந்த சந்தோஷ் நாயகர் என்பவர் ஜெய்பீம் படத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார்.

    ஐதராபாத்தில் துவங்கிய தளபதி 66 சூட்டிங்... 22 ஆண்டுகளுக்கு பிறகு விஜய்யுடன் இணைந்த பிரபல நடிகர்! ஐதராபாத்தில் துவங்கிய தளபதி 66 சூட்டிங்... 22 ஆண்டுகளுக்கு பிறகு விஜய்யுடன் இணைந்த பிரபல நடிகர்!

    கொல்லும் அரக்கனாக

    கொல்லும் அரக்கனாக

    மத நம்பிக்கையையும், புனித வழிபாட்டு அடையாளங்களையும், சமாதி வைத்து தெய்வமாக வணங்கும் தெய்வத்திரு "குரு" என்பவரை பழங்குடி மக்களை வதைத்துக் கொல்லும் அரக்கனாக ஜெய்பீம் சினிமாவில் சித்தரிக்கப்பட்டுள்ளது. வன்னிய குல சாதியினர் ST சாதியினரை கொடுமை செய்வதாக காட்சிப்படுத்தி உள்ளதாக தனது நண்பர்கள் தன்னிடம் கூறும் போது அவமான மடைந்தேன் என சந்தோஷ் நாயகர் தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

    அந்தோணிசாமி எப்படி குருவானார்

    அந்தோணிசாமி எப்படி குருவானார்

    இந்த படத்தில் முதன்மை வில்லனாகக் காட்டப்படும் துணை ஆய்வாளரின் அசல்பெயர் அந்தோணிசாமி என்பதாகும். இவர் பிசி வகுப்பைச் சேர்ந்தவர். ஆனால், வன்னியர்களை குற்றவாளிகளாக காட்சிப்படுத்த வேண்டும் என்கிற தவறான நோக்கத்தில் அந்தோணிசாமி என்கிற பெயரை மாற்றி குருமூர்த்தி என வைத்தனர்.

    அக்கினி குண்டம்

    அக்கினி குண்டம்

    எஸ்.ஐ. குருமூர்த்தி வீட்டில் உள்ள காலண்டரில் அக்கினி குண்டம் படத்தையும் காட்சி படுத்தி இருந்தனர். மேலும், ஊர் பஞ்சாயத்து தலைவராக குணசேகரன் என்ற ஒரு பாத்திரத்தை வைத்து "உங்க 4 வீடுகளையும் கொளுத்தி விடுவேன்" என்ற வசனத்தையும் வைத்து காட்சிப்படுத்தி உள்ளனர் என படம் முழுக்க அடுக்கடுக்கடுக்காக வன்னியர்களை வில்லன்களாக காட்சிப்படுத்தும் நோக்கிலேயே இயக்குநர் இந்த படத்தை உருவாக்கி உள்ளார் என மொத்தம் 22 பாயிண்ட்டுகளை அடுக்கி அவர் மனு அளித்துள்ளார்.

    Recommended Video

    சூர்யாவை பற்றிய ரகசியத்தை சொன்ன சிவகுமார் | Oh My Dog | Arun Vijay
    நீதிமன்றம் உத்தரவு

    நீதிமன்றம் உத்தரவு

    இந்த மனு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெய்பீம் படத்தின் தயாரிப்பாளர்கள் ஜோதிகா, சூர்யா, இயக்குநர் ஞானவேல்ராஜா ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்ய வேளச்சேரி காவல் நிலையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக 2டி நிறுவனத்துக்கும் நடிகர் சூர்யாவின் குடும்பத்துக்கும் புதிய சிக்கல் உருவாகி உள்ளது.

    மீண்டும் அதே இயக்குநருடன்

    மீண்டும் அதே இயக்குநருடன்

    இயக்குநர் டி.ஜே. ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த ஜெய்பீம் திரைப்படத்திற்கு அரசியல் ரீதியாகவும் சாதிய ரீதியாகவும் மிகுந்த எதிர்ப்புகள் வந்துள்ள நிலையில், அடுத்ததாக மீண்டும் டி.ஜே. ஞானவேல் உடன் இணைந்து மீண்டும் ஒரு படத்தில் சூர்யா நடிக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    English summary
    Saidapet Court orders to file a case against 2D Producers Suriya and Jyotika over JaiBhim issue.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X