Don't Miss!
- News
வாட்ஸ்அப்ல கட்டுக்கதைகளை சொல்லுவாங்க.. நம்பாதீங்க.. மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அட்வைஸ்!
- Automobiles
மாருதி, ஹூண்டாயை அண்ணாந்து பாக்க வைத்த டாடா! சம்பவம் லோடிங்! தளபதி 67-ஐ விட எதிர்பார்ப்பு எகிறிகிட்டே போகுது!
- Sports
டி20 வரலாற்றில் இந்தியாவின் மகத்தான வெற்றி.. 3வது டி20ல் சுப்மன் கில் தந்த ஷாக்.. ஆடிப்போன நியூசி!
- Finance
மூலதன செலவு ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிப்பு.. நிதியமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க ஆசைப்படுறீங்களா? அப்ப இந்த உணவுகளை தெரியாமகூட சேர்த்து சாப்பிடாதீங்க!
- Technology
அந்த ஹார்திக் பாண்டியா போன் நியாபகம் இருக்கா? அறிமுக தேதி உறுதி! விலை இதுதானா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
வனிதா - பீட்டர் பால் திருமணம்.. எலிசபெத் தொடர்ந்த வழக்கு.. நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!
சென்னை வனிதா மற்றும் பீட்டர் பால் திருமணம் குறித்து அவரது முதல் மனைவியான எலிசபெத் ஹெலன் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் வனிதா விஜயக்குமார். பல முறை சொத்து பிரச்சனை தொடர்பாக குடும்பத்தினருடன் தகராறில் ஈடுபட்டு செய்திகளில் அடிபட்டு வந்தார்.
இந்நிலையில் கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார் வனிதா. இதில் சண்டைக் கோழியா வலம் வந்த வனிதாவால் அந்த ஷோவே ஹிட்டானது.
கொஞ்ச நஞ்ச பாடா படுத்துனாங்க ஆரிய.. வச்சு செய்யுங்க கமல் சார்.. செம்ம காண்டில் நெட்டிசன்ஸ்!

லாக்டவுனில் திருமணம்
தொடர்ந்து குக்கு வித் கோமாளி, கலக்கப்போவது யார் என்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் இந்த ஆண்டு மிரட்டிய கொரோனாவுக்கு நடுவில் லாக்டவுன் நேரத்தில் பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார் வனிதா.

திருமணத்தால் விமர்சனம்
தனது யூடியூப் சேனலுக்கு உதவியாக இருந்த விஷுவல் எடிட்டரான பீட்டர் பால் என்பவரை கிறிஸ்தவ முறைப்படி கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்தார் வனிதா. ஏற்கனவே இரண்டு திருமணங்கள் செய்து மூன்று குழந்தைகளுக்கு தாயான வனிதா மூன்றாவது திருமணம் செய்தது பெரும் விமர்சனத்துக்குள்ளானார்.

வனிதா பீட்டர் மீது வழக்கு
பீட்டர் பாலின் முதல் மனைவியான எலிசபெத் ஹெலன், தன்னுடைய அனுமதியில்லாமல் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக பீட்டர் பால் மீதும் வனிதா மீதும் சைதாப்பேடை நீதிமன்றததில் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் எலிசபெத் ஹெலன் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

ஆஜராக உத்தரவு
அப்போது வனிதா மற்றும் பீட்டர் பால் ஆகிய இருவரும் வரும் 23ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனை தொடர்ந்து நடிகை வனிதா மற்றும் பீட்டர்பால் ஆகிய இருவரும் வரும் 23ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர் ஆவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குடிக்கு அடிமையானதால்
திருமணம் ஆன மூன்று மாதத்திலேயே வனிதா தனது காதல் கணவரான பீட்டர் பாலை பிரிந்தார். பீட்டர் பால் மீண்டும் குடிக்கு அடிமையானதால் இனி அவருடன் வாழ முடியாது என்றும் இருவரும் பிரிந்துவிட்டதாகவும் கூறி வீடியோ வெளியிட்டார் வனிதா.

என்ன ஆகும்?
மேலும் பீட்டர் பாலை, ஹெலனே வைத்துக்கொள்ளட்டும் என்றும் கூறி பீட்டர் பாலிடம் இருந்து பிய்த்துக்கொண்டார் வனிதா. பீட்டர் பால் மற்றும் வனிதா விஜயகுமார் ஆகிய இருவரும் தற்போது பிரிந்து உள்ள நிலையில் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராவார்களா என்றும் ஆஜாராகும் பட்சத்தில் என்ன நடக்கும் என்றும் கேள்விகள் எழுந்து வருகின்றன.