Rajini - ரஜினியுடன் நடிக்கவிருந்த சீரியல் நடிகை.. ச்ச மிஸ் ஆகிடுச்சே.. யாருனு பாருங்க
சென்னை: ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் படத்தில் நடித்துவருகிறார். அதனை ஜெய்பீம் இயக்குநர் ஞானவேல் இயக்கிவருகிறார். அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் ரஜினிகாந்த். 70 வயதை தாண்டியும் ரஜினிகாந்த் பிஸியாகவும், சுறுசுறுப்பாகவும் இருந்துவருவதை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியமடைந்திருக்கின்றனர். இந்தச் சூழலில் ரஜினி நடித்த ஜெயிலர் படத்தை சன் டிவி சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி தவறவிட்ட விஷயம் தெரியவந்திருக்கிறது.
ஜெயிலர் படத்துக்கு பிறகு அவர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்துவருகிறார். ஜெய்பீம் படத்தை இயக்கிய இயக்குநர் என்பதால் ஞானவேல் இந்தப் படத்தில் ரஜினியை வைத்து எந்த மாதிரியான விஷயத்தை பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதேசமயம் ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான டைட்டில் டீசரை பார்க்கையில் ஒருவேளை படம் கமர்ஷியல் பாதையில் பயணிக்குமோ என்ற சந்தேகத்தை ரசிகர்கள் எழுப்பிவருகின்றனர்.

நட்சத்திர பட்டாளம்: இந்தப் படத்தில் ரஜினிகாந்த்துடன் அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், ரித்திகா சிங், துஷாரா விஜயன், மஞ்ச் வாரியர், ராணா டகுபதி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஃபகத் பாசில் ரஜினிக்கு மகனாகவும், ராணா டகுபதிதான் படத்துக்கு வில்லன் என்றும் கூறப்படுகிறது. படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இன்றுகூட வேட்டையன் பட கெட்டப்பில் ரஜினிகாந்த் வந்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பெரிய அளவில் ட்ரெண்டானது குறிப்பிடத்தக்கது.
தலைவர் 171: இந்தப் படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 171ஆவது படத்தில் நடிக்கிறார். இப்படி ரஜினிகாந்த் இப்போதும் படுபிஸியாக இருப்பதை பார்த்து ஒட்டுமொத்த திரையுலகும் ஆச்சரியம்தான் படுகிறது. இதற்கிடையே கெஸ்ட் ரோலில் ரஜினிகாந்த் நடித்த லால் சலாம் திரைப்படம் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி தோல்வியை சந்தித்தது. லோகேஷ் கனகராஜ் படத்தை முடித்துவிட்டு சௌந்தர்யா இயக்கத்தில் அவர் நடிக்கலாம் என்றும் ஒரு பேச்சு ஓடுகிறது. கவிஞர் வைரமுத்து ரஜினிக்கு, 'மீசை வைத்த குழந்தையப்பா' என்று ஒரு பாடலில் எழுதியிருப்பார். அதற்கேற்றபடி குழந்தைபோல் படு சுறுசுறுப்பாக இருக்கிறார் ரஜினி.
ஜெயிலர்: இதற்கிடையே ரஜினிகாந்த் ஒரு ஹிட்டுக்காக கடந்த சில வருடங்களாகவே காத்திருந்தார். அவர் நடித்த தர்பார், அண்ணாத்த ஆகிய இரண்டு படங்களுமே தோல்வியை சந்தித்த சூழலில்தான் ஜெயிலர் படத்தில் நடித்து மெகா ஹிட் கொடுத்தார். அந்தப் படம் உலகம் முழுவதும் 700 கோடி ரூபாயை வசூலித்தது. இந்தப் படத்தின் வெற்றி ரஜினியின் சூப்பர் ஸ்டார் நாற்காலியை தக்கவைத்துவிட்டதாக அவரது ரசிகர்கள் உற்சாகத்தோடு கூறிவருகின்றனர். அதேபோல் ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகமும் விரைவில் உருவாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மருமகள் கேரக்டர்: இந்நிலையில் ஜெயிலர் படம் பற்றிய ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது அந்தப் படத்தில் ரஜினிகாந்த்துக்கு மருமகளாக மிர்ணா என்ற நடிகை நடித்திருந்தார். கேரளாவை சேர்ந்த அவர் நன்றாகவே நடித்திருந்தார். ஜெயிலர் படத்தின் வெற்றியாலும், மிர்ணாவின் அழகாலும் அடுத்தடுத்து அவருக்கு பட வாய்ப்புகளும் கிடைக்க ஆரம்பித்திருக்கின்றன. ஆனால் ஜெயிலர் படத்தில் முதலில் அவருக்கு பதிலாக நடிக்கவிருந்தது கயல் சீரியலில் நடித்த சைத்ரா ரெட்டிதானாம். பேச்சுவார்த்தை எல்லாம் முடிந்து ஃபைனல் ஆன பிறகு ஏதோ காரணத்தால் படத்திலிருந்து விலகினாராம் சைத்ரா. அவர் வலிமை படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











