twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'ஆதிபுருஷ்' ராவணன் பற்றி சர்ச்சைக் கருத்து.. மன்னிப்புக் கேட்டார் பிரபல நடிகர் சைஃப் அலிகான்!

    By
    |

    மும்பை: ராவணன் பற்றிய தனது கருத்துக்கு பிரபல நடிகர் சைஃப் அலிகான் மன்னிப்புக் கேட்டுள்ளார்.

    Recommended Video

    மடக்கி மடக்கி ரியோவை கடுப்பேற்றிய அனிதா. | Call Centre Task

    நடிகர் பிரபாஸ், இப்போது ராதே ஷ்யாம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் ஷூட்டிங் பெரும்பாலும் முடிந்துவிட்டது.

    அது வதந்தின்னு சொன்னாரே.. பிரபல பாடகி 2 வது திருமணம் உண்மைதான்.. திடீர் நிச்சயதார்த்தம்! அது வதந்தின்னு சொன்னாரே.. பிரபல பாடகி 2 வது திருமணம் உண்மைதான்.. திடீர் நிச்சயதார்த்தம்!

    இதையடுத்து அவர் நடிக்கும் படம், 'ஆதிபுருஷ்' இந்திப் பட இயக்குனர் ஓம்ராவத் இயக்குகிறார்.

    பிரம்மாண்ட பட்ஜெட்

    பிரம்மாண்ட பட்ஜெட்

    ராமாயணக் காவியத்தின் ஒரு பகுதி கதையை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகிறது. இந்தி, தெலுங்கில் உருவாக இருக்கும் இந்தப் படத்தை தமிழ், மலையாளம், கன்னட மொழிகளிலும் வெளியிடுகின்றனர். 3டி-யில் பிரம்மாண்ட
    பட்ஜெட்டில் இந்தப் படம் உருவாகிறது.

    சவாலான கேரக்டர்

    சவாலான கேரக்டர்

    படம் பற்றி பிரபாஸ் கூறும்போது, இந்தப் படத்தின் ஒவ்வொரு கேரக்டரும் சவாலானது. இந்த காவிய கதாபாத்திரத்தில் நடிக்க ஆவலுடன் இருக்கிறேன் என்று தெரிவித்திருந்தார். இந்தப் படத்தில் அவர் ராமராக நடிப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் வில்வித்தை பயிற்சி பெற இருக்கிறார் .

    சைஃப் அலிகான்

    சைஃப் அலிகான்

    இதில் வில்லனாக, அதாவது ராவணனாக இந்தி நடிகர் சைஃப் அலிகான் நடிக்கிறார்.
    இந்தப் படம் 11.08.2022 அன்று வெளியாகும் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதன் ஷூட்டிங் ஜனவரியில் தொடங்க இருக்கிறது. படப்பிடிப்பைத் தொடங்கி, ஒரே கட்டமாக ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் முடிக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

    ராவணன் நல்ல பக்கம்

    ராவணன் நல்ல பக்கம்

    இந்நிலையில், இந்தப் படம் பற்றி சைஃப் அலி கான் அளித்த பேட்டியில், ஆதிபுருஷ் திரைப்படம் ராவணனின் நல்ல பக்கத்தை காட்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த கருத்து சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியது. பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான ராம் கடம், சைஃப் அலி கான் கருத்து அதிர்ச்சியளிக்கிறது என்று கூறியிருந்தார்.

    திரும்பப் பெறுகிறேன்

    திரும்பப் பெறுகிறேன்

    இதையடுத்து சைஃப் அலிகானுக்கு எதிராக சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்தன. இதனால், தனது கருத்துக்கு சைஃப் அலி கான் மன்னிப்பு கோரியுள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்ட அறிக்கையில், எந்த உள்நோக்கத்துடனும் அந்த கருத்தை தெரிவிக்கவில்லை. அதற்காக மன்னிப்புக் கோருவதுடன் என் கருத்தையும் திரும்பப் பெறுகிறேன்.

    வீரத்தின் அடையாளம்

    வீரத்தின் அடையாளம்

    ராமர் எப்போதுமே நீதி மற்றும் வீரத்தின் அடையாளமாக எனக்கு இருந்து வருகிறார். தீமையை நன்மை வெற்றி கொள்வதை பற்றிய கதையை கொண்டதுதான் ஆதிபுருஷ் படம் என்றும் கூறியுள்ளார். இதையடுத்து இந்த சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது. இந்தப் படத்தை
    பூஷண் குமார் தயாரிக்கிறார்.

    English summary
    Saif Ali Khan's has given interview about his upcoming film 'Adipurush'. His 'humane' Raavan statement stirred a controversy on social media, the actor has withdrawn his comment and apologised to all.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X