மெகா பட்ஜெட்டில் உருவாகும்.. அந்த காவிய படத்தில் நான்தான் வில்லன்.. கன்பர்ம் பண்ணினார் பிரபல நடிகர்

By

சென்னை: அந்த காவிய படத்தில் வில்லனாக நடிப்பது உண்மைதான் என்று உறுதிப்படுத்தி உள்ளார், பிரபல நடிகர்.

Recommended Video

ரூ. 100 கோடி சம்பளம் கேட்ட பாகுபலி நடிகர்.. எந்தப் படத்துக்குன்னு பாருங்க.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!

கொரோனா சினிமா துறையை மொத்தமாக முடக்கி வைத்திருந்தாலும் சில புதிய பிரமாண்ட அறிவிப்புகள் இந்த காலகட்டத்தில் வெளிவந்தன.

அதில் ஒன்று ஆதிபுருஷ். ராமாயணக் காவியத்தின் ஒரு பகுதி கதையை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகிறது.

பிரபாஸ் ஹீரோ

பிரபாஸ் ஹீரோ

இந்திப் பட இயக்குனர் ஓம்ராவத் இயக்குகிறார். இவர் 'தன்ஹாஜி- த அன்சங்க் வாரியர்' என்ற படத்தின் இயக்குனர். ஆதிபுருஷ் படம் பற்றிய அறிவிப்பையும் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் கடந்த சில நாட்களுக்கு முன், வெளியிட்டிருந்தனர். இந்தி, தெலுங்கில் உருவாக இருக்கும் இந்தப் படத்தை தமிழ், மலையாளம், கன்னட மொழிகளிலும் வெளியிடுகின்றனர். இதில் பிரபாஸ் ஹீரோவாக நடிக்கிறார்.

சவால் நிறைந்தது

சவால் நிறைந்தது

3டி-யில் உருவாகும் இந்த படம் நடிகர் பிரபாஸ் கடந்த சில நாட்களுக்கு முன் கூறும்போது, ஒவ்வொரு கேரக்டரும் சவால் நிறைந்தது. இதுபோன்ற ஒரு கேரக்டரை திரையில் கொண்டு வருவது பொறுப்புமிக்கது, பெருமைக்குரியது. இந்தக் காவிய கதாபாத்திரத்தில் நடிக்க ஆவலுடன் இருக்கிறேன் என்று தெரிவித்திருந்தார்.

கிராபிக்ஸ் காட்சி

கிராபிக்ஸ் காட்சி

இந்தப் படத்தின் கிராபிக்ஸ் காட்சிக்கு மட்டும் ரூ.250 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தின் இந்தி பட்ஜெட் மட்டும் ரூ.500 கோடி என்றும் இதில் பாதியை கிராபிக்ஸுக்கு செலவழிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. இதற்கிடையே இந்தப் படத்தில் வில்லனாக, பிரபல இந்தி நடிகர் சைஃப் அலிகான் நடிப்பதாகக் கூறப்பட்டது.

சைஃப் அலிகான்

சைஃப் அலிகான்

இந்நிலையில் அதை உறுதிப்படுத்தி இருக்கிறார் சைஃப் அலிகான். 'இந்தப் படத்தில் நடிப்பது உண்மைதான். இயக்குனர் ஓம் ராவத்துடன் மீண்டும் இணைவதில் மகிழ்ச்சி. அவருடைய பார்வையும் தொழிநுட்ப அறிவும் பிரமாண்டமானது. இந்தப் படத்தில் கொடூர வில்லனாக பிரபாஸூடன் வாள் சண்டையிடும் நாளை எதிர்நோக்குகிறேன்' என்று தெரிவித்துள்ளார். சைஃப் அலிகான், ஓம் ராவத்தின் 'தன்ஹாஜி- த அன்சங்க் வாரியர்' படத்திலும் நடித்திருந்தார்.

தீபிகா படுகோன்

தீபிகா படுகோன்

நடிகர் பிரபாஸ் இப்போது, ராதே ஷ்யாம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படமும் தமிழ், தெலுங்கு, இந்தியில் வெளியாக இருக்கிறது. இதில் பூஜா ஹெக்டே ஹீரோயின். இதைத் தொடர்ந்து தீபிகா படுகோனுடன் சயின்ஸ் பிக்சன் படத்தில் நடிக்க இருக்கிறார். இதை நாக் அஸ்வின் இயக்குகிறார். இதற்கிடையே இந்த படத்திலும் நடிக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X