ஆதிபுருஷில் நான்...கேரக்டரை விளக்கிய சைஃப் அலிகான்

மும்பை : சமீபத்தில் அதிகம் எதிர்பார்க்கப்படும் பிரம்மாண்ட படங்களில் ஒன்று ஆதிபுருஷ். ஓம் ரவுத் இயக்கும் இந்த படம் ராமாயணத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்படுகிறது. இந்த படத்தில் ராமராக பிரபாஸ், சீதையாக கீர்த்தி சனோன் நடிக்கிறார்கள்.

Saif Ali Khan shares more details about his role in Adipurush

இந்த படத்தில் ஹைலைட்டாக முக்கிய வில்லனான ராவணன் வேடத்தில் சைஃப் அலிகான் நடிக்கிறார். இது ஏற்கனவே தெரிந்த விஷயம் என்றாலும், படத்தில் தனது கேரக்டர் பற்றிய வெளிப்படையாக பேசி உள்ளார் சைஃப் அலிகான்.

இது பற்றி அவர் கூறுகையில், ஓம் ரவுத் என்னை தற்போது இருப்பதை விட பெரிய ஆளாக்க போகிறார். அது என்னை இப்போதிருப்பதை விட பெரிய இடத்திற்கு கொண்டு போகும் என நினைக்கிறேன். இதில் சில தந்திரங்களும் கையாளப்பட்டுள்ளது. ஆனால் நிறைய விஷயங்கள் உண்மையானவை.

ஒரு குறிப்பிட்ட கேரக்டராகவே நாங்கள் மாற வேண்டும் என்பதற்காக எங்களுக்கு கடினமாக பயிற்சிகளை அளிக்க நினைக்கிறார் டைரக்டர். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் ராவணன் இந்தியாவின் சாத்தான். கொடூரமான அரசன். அவருக்கு தனிப்பயிற்சி அளிக்க என்ன இருக்கிறது என நினைத்தேன்.

ஆனால் அவர் மிக வலிமையானவர். ஹீரோவிற்கு அவரை வீழ்த்த அதிக முயற்சிகள் தேவைப்பட்டுள்ளது. அவ்வளவு பலமாக இருந்ததால் தான் ராவணன், பிரம்மாண்ட ஆடைகள் அணிந்து, நிறைய ஆயதங்கள் வைத்துள்ளார். அவருக்கு மிகப் பெரிய அறிவும், சக்தியும் கிடைத்துள்ளன. அவரிடம் உள்ள மூர்க்கதனமான குணங்கள் பற்றிய டைரக்டர் என்னிடம் விளக்கினார்.

அவர் எனக்கு விளக்கிய விதம் அபாரமானது. ஓம், பார்ப்பதற்கு ஓரு மாணவரை போல் இரந்தாலும், மிகச் சிறந்த டைரக்டர். அத்தனை விஷயங்களை பற்றியும் அவர் தெளிவாக தெரிந்து வைத்துள்ளார். அதனால் என் கேரக்டர் உள்ளிட்ட அனைத்து கேரக்டர்களையும் மிக நுணுக்கமாக வடிவமைத்து வருகிறார் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X