'என்னை போல அப்படியே இருக்காரே..' அசத்தல் பரினீதி.. இப்படி வியந்த சாய்னா.. வைரலாகும் போட்டோ!

By

சென்னை: தனது பயோபிக்கில் நடிக்கும் பரினீதியின் போட்டோவை பகிர்ந்துள்ள பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால், அவர் தன்னைப் போலவே இருப்பதாகக் கூறியுள்ளார்.

பிரபலங்களின் வாழ்க்கைக் கதையை படமாக்குவது சினிமாவில் அதிகரித்து வருகிறது.

சினிமா நடிகர், நடிகைகள், அரசியல் தலைவர்கள், ராணுவ வீரர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களின் வாழ்க்கைக் கதைகளை சினிமாவாக எடுக்க தயாரிப்பாளர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்

பி.வி.சிந்து வாழ்க்கை

பி.வி.சிந்து வாழ்க்கை

கிரிக்கெட் வீரர்கள் சச்சின், தோனி, தடகள வீரர் மில்கா சிங், குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் ஆகியோரின் வாழ்க்கை கதைகள் சினிமாவானது. இந்தப் படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றன. பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்துவின் வாழ்க்கைக் கதையை, நடிகர் சோனு சூட் தயாரிக்கிறார்.

சபாஷ் மித்து

சபாஷ் மித்து

அவர், பயிற்சியாளராகவும் நடிக்கிறார். இதே போல, மகளிர் கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜின் வாழ்க்கையும் படமாக்கப்படுகிறது. இதில் டாப்ஸி நடிக்கிறார். இந்தப் படத்துக்கு சபாஷ் மித்து என்று டைட்டில் வைத்துள்ளனர். பிரபல வெயிட்லிப்ஃடிங் வீராங்கனை, கர்ணம் மல்லேஸ்வரியின் வாழ்க்கை கதை சினிமாவாகிறது.

சாய்னா பயோபிக்

சாய்னா பயோபிக்

தமிழக முன்னாள் முதலமைச்சரும் நடிகையுமான ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையும் சினிமாவாகி வருகிறது. தலைவி என்ற பெயரில் உருவாகும் இந்தப் படத்தில் கங்கனா ரனாவத் நடிக்கிறார். விஜய் இயக்குகிறார். இதற்கிடையே, பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவாலின் வாழ்க்கையும் படமாக்கப்பட்டு வருகிறது.

உடல்நிலை பாதிப்பு

உடல்நிலை பாதிப்பு

அமோல் குப்தே இயக்கும் இந்தப் படத்தில் சாய்னாவாக பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் நடித்து வந்தார். இதன் படப்பிடிப்பை பிரபாஸ் தொடங்கி வைத்தார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது, ஸ்ரத்தாவுக்கு உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டது.
இதனால் படப்பிடிப்பு தள்ளிப் போனது.

விலகினார் ஷ்ரத்தா

விலகினார் ஷ்ரத்தா

இதையடுத்து இதன் படப்பிடிப்பு மீண்டும் தொடங்க இருந்த நிலையில் படத்திலிருந்து ஷ்ரத்தா விலகினார். கால்ஷீட் பிரச்னை காரணமாக ஷ்ரத்தாவால் இதில் தொடர முடியவில்லை என்று கூறப்பட்டது. இதையடுத்து சாய்னா நேவால் கேரக்டரில் பரினீதி சோப்ரா நடித்து வருகிறார்.

தன்னைப் போலவே

தன்னைப் போலவே

இந்நிலையில், அந்தப் படத்தின் புதிய போட்டோவை தனது ட்விட்டரில் ஷேர் செய்துள்ள சாய்னா, தன்னைப் போலவே இருப்பதாக பரினீதாவை குறிப்பிட்டுள்ளார். அதில் சாய்னாவை போல ஹேர்ஸ்டைலுடன் இருக்கிறார் பரினீதா. இந்தப் போட்டோ வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X