சைந்தவி நல்ல பொண்ணு.. ஜி.வி. பிரகாஷ் விவாகரத்து விவகாரம்.. தனுஷ் போல மாறிட்டாருன்னு ராஜன் தாக்கு!
சென்னை: தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் விவாகரத்து கோரி நீதிமன்றம் சென்றது தொடர்பாக சமீபத்தில் வீடியோ மூலம் இருவரையும் தயாரிப்பாளர் கே. ராஜன் வெளுத்து வாங்கியிருந்தார். இருவரது தனிப்பட்ட விவகாரம் தொடர்பாக ராஜன் எந்தவொரு கருத்தையும் எப்படி சொல்லலாம் என அவரை தனுஷ் ரசிகர்கள் ரவுண்டு கட்டி பொளந்தனர்.
இந்நிலையில், 'கன்னி' எனும் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட கே. ராஜன் தனுஷ் - ஐஸ்வர்யாவை தொடர்ந்து அடுத்து ஜி.வி. பிரகாஷ் மற்றும் சைந்தவி விவாகரத்து பண்ண முடிவு செய்து விட்டனர் என்பதை பேசி பரபரப்பை கிளப்பி உள்ளார்.

ஜி.வி. பிரகாஷ் - சைந்தவி தம்பதியினர் பிரிவதாக அறிவித்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், பயில்வான் ரங்கநாதன், கே. ராஜன் உள்ளிட்ட பலர் தங்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
காலம் கெட்டுப்போச்சு: சாஃப்ட்வேர் கம்பெனிகளில் வேலை பார்க்கும் நபர்கள் தான் 15 நாளில் லவ்வு ஒரு மாசத்துல திருமணம் செய்வது, 3வது மாசத்துல விவாகரத்து என ஃபாஸ்ட் ஃபுட் வாழ்க்கை வாழ்ந்து வரும் நிலையில், சினிமா பிரபலங்கள் பலரும் தற்போது அதே போல மாறி வருவது வருத்தத்தை அளிப்பதாக தயாரிப்பாளர் கே. ராஜன் 'கன்னி' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் உருக்கமாக பேசியுள்ளார்.
பசங்க வாழ்க்கை என்ன ஆகுறது?: தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கடந்த மாதம் விவாகரத்து வேண்டும் என கோர்ட் படி ஏறினார்கள். அவர்கள் இருவரும் பண்ண வேலை காரணமாக பாதிக்கப்படுவது யாரென்று பார்த்தால் அந்த 2 பசங்க தான். அவர்களின் எதிர்காலத்தை எல்லாம் கருத்தில் கொள்வதே இல்லை. தங்கள் சுயநலத்தை மட்டுமே பார்க்கின்றனர். பாவம் அந்த குடும்பத்தின் மாபெரும் தலைவன், உலகம் அறிந்த தலைவன் அவர் மனம் எவ்வளவு வாடியிருக்கும் என ரஜினி குறித்தும் ராஜன் பேசியுள்ளார்.
சைந்தவி நல்ல பொண்ணு: தனுஷ் - ஐஸ்வர்யாவை தொடர்ந்து அடுத்து இப்போ லேட்டஸ்ட்டாக ஜி.வி. பிரகாஷ் - சைந்தவி பிரியப் போறதா அறிவிச்சிருக்காங்க, அவங்களுக்கும் ஒரு குட்டி பொண்ணு இருக்கு. சைந்தவி ரொம்ப நல்ல பொண்ணு. என்னோட உணர்ச்சிகள் படத்தில் அவ பாடியிருந்தா, பெரியவர்களை ரொம்பவே மதிக்கிற தங்கமான பொண்ணு. காதலிச்சுத்தான் இருவரும் திருமணம் செய்தனர். காதலிக்கும் போது நல்லா இருக்காங்க, திருமணத்துக்குப் பிறகு அந்த காதல் ஏன் கசந்து போகுது? இவர்களின் பிரிவால் குழந்தை தானே பாதிக்கும் என ராஜன் பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications











