இன்ஸ்டாகிராமில் இன்னமும் அந்த பெயர் தான்.. ஜி.வி. பிரகாஷ் போட்டோக்களையும் சைந்தவி தூக்கல!

சென்னை: சமந்தா முதல் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வரை பிரிவு அறிவிப்பு அறிவிப்பதற்கு முன்னதாகவே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதலில் தங்கள் கணவரின் பெயரை நீக்குவதை முதல் வேலையாக வைத்திருந்தனர்.

நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவனை அன் ஃபாலோ செய்துவிட்டார் என சமீபத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நடந்ததையும் அவர்கள் இருவரும் பிரிய போகின்றனரா என கேள்வி கேட்கும் அளவுக்கு சோஷியல் மீடியாவை ரசிகர்கள் உற்றுநோக்கி வருகின்றனர்.

Saindhavi Prakash won t change her instagram id after seperated with GV Prakash

இந்நிலையில், ஜி.வி. பிரகாஷ் மற்றும் சைந்தவி இருவரும் பிரியப் போவதாக அறிவித்துள்ள நிலையிலும் பாடகி சைந்தவி இன்னமும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எந்த ஒரு மாற்றத்தையும் செய்யாதது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

சைந்தவி பிரகாஷ்: இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சைந்தவி பிரகாஷ் எனும் பெயரிலேயே பாடகி சைந்தவி இன்னமும் தனது சோஷியல் மீடியா பக்கங்களில் இருந்து ஜி.வி. பிரகாஷ் பெயரை நீக்கவில்லை. சுமார் 5.6 லட்சம் ரசிகர்கள் பாடகி சைந்தவியை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின் தொடர்ந்து வருகின்றனர். தனது கணவர் ஜி.வி. பிரகாஷுடன் எடுத்த புகைப்படங்கள், குழந்தை அன்வியின் புகைப்படங்கள் என சுமார் 500க்கும் மேற்பட்ட போஸ்ட்டுகளை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சைந்தவி பதிவிட்டுள்ளார்.

திருமண போட்டோக்களும் இருக்கு: பள்ளிப் பருவத்தில் இருந்தே ஜி.வி. பிரகாஷை காதலித்து வந்த சைந்தவி கடந்த 2013ம் ஆண்டு அவரை திருமணம் செய்துக் கொண்டார். திருமணம் முடிந்ததில் இருந்து ஒவ்வொரு மாதமும் மந்திவர்சரி என ஜி.வி. பிரகாஷுக்கு புதிய புதிய பரிசுகளை வழங்குவார் என ஜி.வி. பிரகாஷ் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இந்நிலையில், காதலித்து திருமணம் செய்துக் கொண்ட ஜி.வி. பிரகாஷின் திருமண புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து இன்னமும் சைந்தவி நீக்கவில்லை.

Saindhavi Prakash won t change her instagram id after seperated with GV Prakash

பேபி பம்ப் போட்டோஷூட்: திருமணமாகி 7 ஆண்டுகளுக்கு பிறகு சைந்தவி 2020ம் ஆண்டு கர்ப்பமானார். நிறைமாத கர்ப்பிணியாக அவர் இருக்கும் போது ஜி.வி. பிரகாஷும் சைந்தவியும் நடத்திய பேபி பம்ப் போட்டோஷூட் புகைப்படங்களும் சைந்தவியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Saindhavi Prakash won t change her instagram id after seperated with GV Prakash

மகள் என்றால் உயிர்: பிறந்த பெண் குழந்தைக்கு பல பெயர்களை தேர்வு செய்து கடைசியாக இந்த பெயரை சூட்டினோம் என அன்வி பெயர் வந்தது எப்படி என்பது குறித்து வீடியோ ஒன்றில் பேசிய சைந்தவி, குழந்தை மீது ஜி.வி. பிரகாஷ் ரொம்பவே உயிராக உள்ளார் என்றும் சூட்டிங்கில் வெளியே இருந்தாலும், குழந்தையை பார்க்க வேண்டும் என வீடியோ கால் போட்டு பார்ப்பார் என்றும் பேசியுள்ளார். காதல் ஜோடிகளாக வலம் வந்த இருவரும் திடீரென பிரிந்தது ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்களை கவலையில் ஆழ்த்தி உள்ளது. ஜி.வி. பிரகாஷ் மற்றும் சைந்தவி குடும்பத்தினருக்கும் இது பேரதிர்ச்சியை கொடுத்திருப்பதாக கூறுகின்றனர்.

Saindhavi Prakash won t change her instagram id after seperated with GV Prakash

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X