எங்கள் ரிலேஷன் தொடரும்.. ஜிவி பிரகாஷ் பற்றி மனம் திறந்து பேசிய சைந்தவி
சென்னை: ஏ.ஆர்.ரஹ்மானின் அக்கா மகனும், இசையமைப்பாளர், நடிகருமான ஜிவி பிரகாஷ் தனது பள்ளி கால தோழியான சைந்தவியை பல வருடங்கள் காதலித்து கடந்த 2013ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவருமே ஒருவரையொரு அனுசரித்து, புரிந்துகொண்டு வாழ்க்கையை நகர்த்தி வந்தார்கள். இதன் காரணமாக கோலிவுட்டின் ஃபேவரைட் ஜோடி என்ற பெயரையும் இவர்கள் பெற்றார்கள். இவர்கள் தற்போது பிரிந்திருக்கும் சூழலில் சைந்தவி கொடுத்த பேட்டி ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது.
சினிமா துறையில் காதலித்து திருமணம் செய்துகொள்வது எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமோ அதே அளவுதான் விவாகரத்தும். பல காலம் சேர்ந்து வாழ்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டவர்கள் சில காலத்திலேயே பிரிவதும்; சில காலம் கூட தாங்கமாட்டார்கள் என்று கணிக்கப்பட்டவர்கள் பல ஆண்டுகள் சேர்ந்து வாழ்வதும் நடந்துகொண்டிருக்கிறது. அப்படி பல ஆண்டுகள் சேர்ந்து வாழ்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டவர்கள்தான் ஜிவி பிரகாஷ் - சைந்தவி ஜோடி.

பள்ளி காதல்: ஜிவி பிரகாஷும், சைந்தவியும் ஒன்றாக பள்ளியில் படித்தவர்கள். அப்போதிருந்தே இருவருக்கும் இசை மீது ஆர்வம் அதிகம் இருந்ததால் அந்த இசை துறை அவர்களை காதல் என்ற புள்ளியில் இணைத்தது. இருவரும் உருகி உருகி காதலித்தார்கள். ஜிவி பிரகாஷும் இசையமைப்பாளராக வந்தார், சைந்தவியும் அந்நியன் படத்தில் இடம்பெற்ற 'அண்டங்காக்கா கொண்டைக்காரி' பாடல் மூலம் பின்னணி பாடகியாக அறிமுகமானார். சினிமாவில் இருந்தாலும் தங்களது காதலை பிரியாமல் பார்த்துக்கொண்டார்கள் இருவரும். இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்ட இவர்களுக்கு அன்வி என்ற மகள் இருக்கிறார்.
பிரிந்த ஜோடி: சூழல் இப்படி இருக்க இரண்டு பேருமே தங்களது காதல் வாழ்க்கையை மிகவும் அமைதியாகவும், சந்தோஷமாகவும் நகர்த்திக்கொண்டிருந்தார்கள். இவர்களுக்கு அன்வி என்ற மகளும் இருக்கிறார். சுமூகமாக போய்க்கொண்டிருந்த அவர்களது திருமண வாழ்க்கையில் சில விரிசல்கள் வர ஆரம்பித்தன. அதற்கு காரணம் ஜிவி பிரகாஷ் நடிக்க வந்ததுதான் என்று பலர் கூறினார்கள். அந்த விரிசல் மேற்கொண்டு பெரிதாகி இரண்டு பேருமே பிரிந்துவிட்டார்கள்.
ஒரே மேடையில்: அவர்களது பிரிவு ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. இரண்டு பேரும் பிரிந்ததை அடுத்து வெளிநாட்டில் ஜிவி பிரகாஷின் இசை கச்சேரி நடந்தது. அதில் கலந்துகொண்டு சைந்தவியும் பாடினார். அது பலருக்கும் மகிழ்ச்சியை கொடுத்தது. தொடர்ந்து இரண்டு பேரும் மீண்டும் சேர்ந்து வாழ வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்தன. இந்நிலையில் சைந்தவி கொடுத்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.
சைந்தவி பேட்டி: அவர் அளித்த பேட்டியில், "ஜிவி பிரகாஷ் இசையில் நான் ஏராளமான பாடல்களை பாடியிருக்கிறேன். அவர் இப்போது எனக்கு ஒரு நல்ல நண்பராக இருக்கிறார். நாங்கள் இரண்டு பேரும் இணைந்து ஏராளமான ஹிட் பாடல்களை கொடுத்திருக்கிறோம். நாங்கள் பெர்சனலாக பிரிந்தாலும் இசை ரீதியாக எங்களது ரிலேஷன்ஷிப் தொடர்ந்துகொண்டேதான் இருக்கும்" என்றார்.


Click it and Unblock the Notifications











