எனக்கு வேண்டியதை கடவுள் கொடுப்பாரு.. ஜி.வி. பிரகாஷ் உறவு குறித்து சைந்தவி பேசிய த்ரோபேக் பேட்டி!
சென்னை: இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் அவரது மனைவி பாடகி சைந்தவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், தங்கள் விவாகரத்து முடிவை அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளனர். கடந்த 2020ம் ஆண்டு குழந்தை பிறந்ததில் இருந்தே இருவருக்கும் இடையே பிரச்சனை வெடித்து வந்ததாகவும் கடந்த 6 மாதங்களாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வதோ பேசிக் கொள்வதோ இல்லாமல் இருந்து வந்ததாகவும் இவையெல்லாம் தான் பிரிவுக்கு காரணம் என பல கதைகள் தற்போது உலாவத் தொடங்கி விட்டன.
ஆனால், அதற்கு முன்னதாக ஜி.வி. பிரகாஷை அவரது மனைவி சைந்தவி உருகி உருகி காதலித்தது போல யாருமே காதலித்து இருக்க மாட்டார்கள் என நினைக்கும் அளவுக்கு ஜி.வி. பிரகாஷ் மீது உயிராக இருந்த போது 2 ஆண்டுகளுக்கு முன்னதாக சைந்தவி அளித்த பேட்டி ஒன்று தற்போது தீயாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

பள்ளி பருவத்தில் இருந்தே இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்த நிலையில், 2013ம் ஆண்டு பெரியோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துக் கொண்டனர்.
ஏ.ஆர். ரஹ்மான் மருமகன்: "சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே" பாடலில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் தனது க்யூட்டான குழந்தை வாய்ஸை கொடுத்திருப்பார் ஜி.வி. பிரகாஷ் குமார். இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் சகோதரி மகன் தான் ஜி.வி. பிரகாஷ் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். மாமா ஏ.ஆர். ரஹ்மானிடம் தான் இசையை கற்றுக் கொண்டு பிரபல இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். விஜய் ஆண்டனி வரிசையில் இவரும் இசையமைப்பாளராக மட்டுமின்றி ஹீரோவாகவும் மாறி பல படங்களில் நடித்துள்ளார்.
பள்ளியில் முளைத்த காதல்: ஜி.வி. பிரகாஷ் மற்றும் சைந்தவி இருவரும் ஒரே பள்ளியில் படித்து வந்த நிலையில், இருவருக்குமே இளம் வயதில் இருந்து இசை மீதும் பாடல்கள் மீதும் உண்டான காதல் இருவர் மீது முளைக்கத் தோன்றியது. 12 வயதிலேயே பாடகியாக சைந்தவி மாறிய நிலையில், இசையமைப்பாளராக உருவாகி வந்த ஜி.வி. பிரகாஷை காதலிக்க ஆரம்பித்தார். பல வருடங்கள் காதலித்து வந்த இருவரும் 2013ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டனர்.
கடவுள் கொடுப்பாரு: ஜி.வி. பிரகாஷ் இசையில் சைந்தவி இணைந்து 'தெறி' படத்தில் இடம்பெற்ற "என் ஜீவன்". 'சூரரைப் போற்று' படத்தில் இடம்பெற்ற "கையிலே ஆகாசம்" உள்ளிட்ட பல பாடல்களை கொடுத்துள்ளனர். ஒரு கட்டத்துக்கு மேல் ஜி.வி. பிரகாஷ் இசையில் சைந்தவி பாடுவதையே நிறுத்தி விட்டார். கணவர் தொடர்ந்து மனைவிக்கு மட்டுமே வாய்ப்புக் கொடுக்கிறார் என்கிற பேச்சுக்கள் அடிபடக் கூடாது என்பதற்காக இருவரும் சேர்ந்து இந்த முடிவை எடுத்தோம் என்றும் எனக்கு என்ன வேண்டும் என்பதை கடவுள் பார்த்து கொடுப்பாரு என்றும் அந்த பேட்டியில் சைந்தவி பேசியிருந்தார்.
நல்ல நண்பர்: ஜி.வி. பிரகாஷ் குமார் கணவர் மாதிரி எல்லாம் பிஹேவ் பண்ண மாட்டார் என்றும் அவர் எனக்கு எப்போதுமே ஒரு நல்ல நண்பராகவே இருந்து வருகிறார் என்றும் சைந்தவி அந்த பேட்டியில் ஜி.வி. பிரகாஷ் குறித்து காதலுடன் பேசியிருந்தார். ஒவ்வொரு வருடமும் ஜி.வி. பிரகாஷுக்கு திருமண தேதியை முன்னிட்டு சைந்தவி தான் கிஃப்ட் வாங்கி தருவார் என்று ஜி.வி. பிரகாஷும் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். மகளை தாலாட்டுப் பாடி எல்லாம் ஜி.வி. பிரகாஷ் தூங்க வைக்க மாட்டார் என்றும் அவர் பாட ஆரம்பித்தால், என் பொண்ணு எழுந்து உட்கார்ந்துக் கொண்டு தாளம் போட ஆரம்பித்து விடுவாள் என்றும் கூறியுள்ளார். சந்தோஷமாக இருந்த நட்சத்திர தம்பதியினருக்கு இடையே என்ன பிரச்சனை ஏற்பட்டது என சினிமா வட்டாரத்தில் பல பிரபலங்களே புலம்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











