மீண்டும் சேரப்போகும் ஜிவி பிரகாஷ் - சைந்தவி.. காரணம் என்ன தெரியுமா?.. ரசிகர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சி
சென்னை: தமிழ் திரைத்துறையில் கடந்த சில மாதங்களாகவே விவாகரத்துகள் அதிகம் நடந்துகொண்டிருக்கின்றன. ஜெயம் ரவி - ஆர்த்தி, தனுஷ் - ஐஸ்வர்யா, டி.இமான் - மோனிகா, ஏ.ஆர்.ரஹ்மான் - சாய்ரா பானு என செல்லும் அந்த லிஸ்ட்டில் ஜிவி பிரகாஷ் - சைந்தவியும் இருக்கிறார்கள். இரண்டு பேருமே பள்ளி காலத்தில் காதலிக்க ஆரம்பித்து பல வருட காதலுக்கு பிறகு திருமணம் செய்துகொண்டார்கள். அவர்களது விவாகரத்து ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி மகன் என்ற அடையாளத்தோடு சினிமாவில் அறிமுகமான ஜிவி பிரகாஷ் தனது இசை திறமையால் தனக்கென தனி அடையாளத்தை பெற்றுக்கொண்டார். தான் இசையமைத்த முதல் படமான வெயிலிலேயே மிக அருமையான இசையை கொடுத்திருந்தார் அவர். அதனையடுத்து ரஜினிக்கு குசேலன், அஜித்துக்கு கிரீடம், விக்ரமுக்கு தாண்டவம், தெய்வ திருமகள், தனுஷுக்கு பொல்லாதவன், சிம்புவுக்கு காளை என வரிசையாக ஹிட் பாடல்களாக கொடுத்தார்.

பெஸ்ட் இசை: முக்கியமாக செல்வராகவன் இயக்கத்தில் உருவான ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, வசந்தபாலன் இயக்கத்தில் அங்காடி தெரு, பாலா இயக்கத்தில் பரதேசி ஆகிய படங்களில் அவரது இசை மிகச்சிறப்பாக இருந்தது. இதனால் முன்னணி இசையமைப்பாளர் என்பதையும் தாண்டி கோலிவுட்டின் முக்கியமான இசையமைப்பாளர் என்ற பெயரையும் அவர் பெற்றுவிட்டார். மேலும் அவருக்கென்று பலரும் ரசிகர்களாகவும் மாறி அவரின் இசையை தொடர்ந்து கேட்க ஆரம்பித்தார்கள்.
ஹீரோ ஜிவி பிரகாஷ்: சூழல் இப்படி இருக்க அவர் டார்லிங் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி வரிசையாக பல படங்களில் நடித்தார். அவர் நடித்ததிலேயே சிவப்பு மஞ்சள் பச்சை, சர்வம் தாளமயம் படங்கள்தான் அவருக்கு சொல்லிக்கொள்ளும்படியான வெற்றியையும், பெயரையும் கொடுத்தன. இருந்தாலும் நடிப்பதை அவர் நிறுத்தவில்லை. அதேசமயம் நடிப்பில் மட்டும் கவனம் செலுத்திய அவர் அசுரன், சூரரைப் போற்று என வரிசையாக இசையமைக்கவும் ஆரம்பித்திருக்கிறார்.
சைந்தவியுடன் திருமணம்: இதற்கிடையே தனது பள்ளி கால தோழியான சைந்தவியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு அன்வி என்ற மகள் இருக்கிறார். பல வருடங்கள் சேர்ந்து வாழ்ந்துவந்த அவர்கள்; அண்மையில் பிரிவதாக அறிவித்தார்கள். அதற்கு காரணம் திரைப்படங்களில் ஹீரோயின்களுடன் ஜிவி பிரகாஷ் நெருக்கமாக நடித்தது சைந்தவிக்கு பிடிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இருந்தாலும் உண்மையான காரணம் என்னவென்று அவர்களுக்குத்தான் தெரியும்.
மீண்டும் ஜிவி பிரகாஷ் - சைந்தவி: இந்நிலையில் ஒருபக்கம் விவாகரத்து இருக்க அவர்கள் மீண்டும் இணையவிருக்கிறார்கள். அதாவது டிசம்பர் ஏழாம் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் செலிபிரேஷன் ஆஃப் லைஃப் என்ற பெயரில் ஜிவி பிரகாஷின் இசை கச்சேரி நடக்கவிருக்கிறது. அதில் சைந்தவி பாடல் பாடப்போகிறார். அதனை சைந்தவியே அறிவித்து ஜிவி பிரகாஷ் சார் இசை கச்சேரியில் பாடப்போகிறேன் என்று தெரிவித்திருக்கிறார். என்னதான் விவாகரத்து இருந்தாலும் இசைக்காக மீண்டும் அவர்கள் இணையவிருப்பது நல்ல விஷயம் என்று ரசிகர்கள் பாராட்டிவருகிறார்கள். அதேபோல் வாழ்க்கையிலும் மீண்டும் சேர்ந்துவிட வேண்டும் என்று கோரிக்கையையும் வைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











