நோ லிப் .. நோ கிஸ்...: ‘பென்சில்’ நாயகனுக்கு காதல் மனைவி சைந்தவி உத்தரவு?
சென்னை: உடன் நடிக்கும் கதாநாயகிக்கு உதட்டு முத்தம் தரக் கூடாது என ஜி.வி.பிரகாஷுக்கு உத்தரவிட்டுள்ளார் அவரது மனைவி சைந்தவி் என்று கோலிவுட்டில் பேசிக் கொள்கிறார்கள்.
'தலைவா', 'ராஜா ராணி' உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்த வெற்றி நாயகன் ஜீ.வி.பிரகாஷ். இவர் தற்போது 'பென்சில்' என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடி'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தில் நடித்த ஸ்ரீதிவ்யா. மணி நாகராஜ் இயக்கம்.
இசையமைப்பாளராக இருந்து கதாநாயகனாக மாறியுள்ள ஜி.வி.பிரகாஷ் உடன் நடிக்கும் நடிகைகளுக்கு உதட்டு முத்தம் கொடுப்பது மாதிரியான காட்சிகளில் நடிக்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளாராம் அவரது காதல் மனைவி சைந்தவி.
இதுகுறித்து ஒரு இதழுக்கு ஜீ.வி.பிரகாஷ் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது...

பள்ளி மாணவன் வேடம்...
‘பென்சில்' படம் பள்ளி மாணவன் பற்றிய படம். இந்த படத்தின் கதை எனக்கு ஏற்ற விதத்தில் அமைந்ததால் நடிக்க ஒப்புக் கொண்டேன்.

நடிப்புப் பயிற்சி....
கூத்துப்பட்டறையைச் சேர்ந்த பாபு மற்றும் ‘ஆடுகளம்' நரேன் ஆகியோருடன் நடிப்பு பயிற்சி பெற்றுள்ளேன். நடிப்பதற்கு என் மனைவி சைந்தவி தடை ஏதும் சொல்லவில்லை.

மனைவியின் நிபந்தனை....
ஆனால், எந்த நடிகையுடன் நடித்தாலும் உதடு முத்தம் கொடுத்து நடிக்கக்கூடாது. நெருக்கமான காட்சிகளில் நடிக்கக்கூடாது என நிபந்தனை விதித்திருக்கிறார்.

குடும்பப்படம்...
நான் நடிக்கும் படம் குடும்பத்தினருடன் அமர்ந்து பார்க்கும்படிதான் இருக்கும்.

தொடர்ந்து இசையமைப்பேன்....
நடிக்க வந்தாலும் நான் இசையமைப்பதை நிறுத்தமாட்டேன். தொடர்ந்து படங்களில் இசையமைப்பேன்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











