தேசிய விருது வாங்கிய ஜிவி பிரகாஷ்.. சைந்தவி ரியாக்ஷன் இதுதான்.. பிரிந்தாலும் பாசம் குறையல
சென்னை: 71வது தேசிய விருது நேற்று அறிவிக்கப்பட்டது. அதில் சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது அவருக்கு இரண்டாவது தேசிய விருது என்பது குறிப்பிடத்தக்கது. தனக்கு விருது கிடைத்தது குறித்து நெகிழ்ச்சியுடன் பலருக்கும் நன்றி தெரிவித்திருந்தார் ஜிவி. பலரும் அவருக்கு தங்களது வாழ்த்தினை தெரிவித்துவருகிறார்கள்.
தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் முக்கியமான இசையமைப்பாளர் என்ற பெயரை பெற்றிருக்கிறார் ஜிவி பிரகாஷ். வெயில் படத்தில் அவர் மியூசிக் டைரக்டராக அறிமுகமாகும்போது டீன் ஏஜ் பருவத்தில்தான் இருந்தார். அப்போதே அவர் தனது இசையில் அனைவரையும் கவர்ந்தார். அந்தப் படத்தின் வெற்றிக்கு பிறகு தொடர்ந்து வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன ஜிவிக்கு. அறிமுகமான சில வருடங்களிலேயே ரஜினி உள்ளிட்டோரின் படத்துக்கும் இசையமைக்க ஆரம்பித்துவிட்டார்.
மெலோடியில் கிங்: அனைத்து ஜானர் இசையிலும் அவர் பட்டையை கிளப்பினாலும் ஜிவியின் மெலோடி தனி ரகம்தான். அவர் அப்படி போட்ட மெலோடிகள் அத்தனையும் படத்தின் வெற்றிக்கு பெரும் பங்காற்றியிருக்கின்றன. அதுமட்டுமின்றி இளைஞர்களின் ஆல் டைம் ப்ளே லிஸ்ட்டில் அவரது மொலோடிகள் குறைந்தபட்சம் பத்தாவது இருக்கும். அவர் கடுமையாக உழைத்து சிறப்பான இசையை கொடுத்தாலும் சரியான அங்கீகாரம் கிடைக்காமல் இருந்தது.

தேசிய விருது வென்ற ஜிவி பிரகாஷ்: அப்படிப்பட்ட நிலைமையில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான அசுரன் படத்துக்கு இசையமைத்தார். பின்னணி இசையும், பாடல்களும் அவ்வளவு ஈர்க்கும்படி இருந்தன. இசை மிகச்சிறப்பாக இருந்ததன் காரணமாக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது வாங்கினார். அவர் விருது வாங்கியதை அனைவருமே கொண்டாடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது தேசிய விருது: இசையமைப்பு, நடிப்பு என பிஸியாக இருக்கும் அவர்தான் தனுஷ் நடித்த வாத்தி படத்துக்கும் இசை. அந்தப் படத்தின் பாடல்களும் பட்டையை கிளப்பின. இந்நிலையில் 71ஆவது தேசிய விருது நேற்று அறிவிக்கப்பட்டது. அதில் 2023ஆம் ஆண்டின் சிறந்த இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் என தெரிவிக்கப்பட்டது. எனவே இரண்டாவது முறையாக அவர் தேசிய விருது பெற்றிருக்கிறார். அவருக்கு பலரும் தங்களது வாழ்த்தினை தெரிவித்துவருகிறார்கள்.
சைந்தவியின் ரியாக்ஷன்: ஜிவி பிரகாஷும் நெகிழ்ச்சியுடன் அனைவருக்கும் நன்றி சொல்லியிருந்தார். சூழல் இப்படி இருக்க அவரது முன்னாள் மனைவி சைந்தவி; ஜிவி பகிர்ந்திருந்த நன்றி அறிக்கையை தனது ஃபேஸ்புக் ஸ்டோரியில் வைத்திருக்கிறார். இதனைப் பார்த்த ரசிகர்கள் இரண்டு பேரும் மண வாழ்க்கையில் பிரிந்திருந்தாலும் ஒருவருக்கொருவர் நட்புடனும், அன்புடனும் இருந்துவருகிறார்கள்.
இவ்வளவு பக்குவமான ஜோடியை இதுவரை பார்த்ததில்லை என கமெண்ட்ஸ் செய்து அவர்களுக்கு பாராட்டு தெரிவிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். முன்னதாக ஜிவியும், சைந்தவியும் காதலித்து, திருமணம் செய்து ஒரு பெண் குழந்தையை பெற்றார்கள். இப்போது தங்களுக்குள் எழுந்த சில கருத்து வேறுபாட்டால் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்றிருக்கிறார்கள் என்பதுகுறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











