காற்று வெளியிடை படத்தில் முதலில் நடிக்க இருந்தது ரவுடி பேபியா..? வெளியான ஷாக் தகவல் !

சென்னை : நடிகர் கார்த்தி நடித்து இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான காற்று வெளியிடை திரைப்படம் சில வருடங்களுக்கு முன்பு வெளியாகி பலரையும் கவர்ந்தது.

Recommended Video

Aditirao Hydari dancing tribute to her guru | Sufiyum Sujathayum, Hey Sinamika

ராணுவ விமான ஓட்டியின் வாழ்க்கையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் தேசிய விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளை வென்றது.

இவ்வாறு இந்திய ராணுவத்தையும் அதில் உள்ள அழகான காதலர்களின் காதலையும் மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியிருந்த இந்த திரைப்படத்தில் அதிதி ராவ் ஹீரோயினாக நடித்து இருந்த நிலையில், முதலில் அந்த கதாபாத்திரத்திற்கு அணுகப்பட்டது பிரபல ரவுடி பேபி நடிகையை என தகவல்கள் வெளியாகியுள்ளது.

தவிர்க்கமுடியாத ஒருவராக

தவிர்க்கமுடியாத ஒருவராக

தனது ஒவ்வொரு படங்களின் மூலமும் வித்தியாசமான கதைகளை கையாண்டு வரும் இயக்குனர் மணிரத்னம் பல்வேறு விதமான காதல் கதைகளை கொண்ட திரைப்படங்களை எடுத்து இந்திய அளவில் மிகப் பெரிய இயக்குனர்களின் பட்டியலில் தவிர்க்கமுடியாத ஒருவராக இருந்து வருகிறார்.

காற்று வெளியிடை

காற்று வெளியிடை

இவ்வாறு இவர் இயக்கிய காதல் படங்கள் பல்வேறு தரப்பு மக்களையும் கவர்ந்து வந்த நிலையில் 2017 ஆம் ஆண்டு நடிகர் கார்த்தி நடிப்பில் மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை திரைப்படம் வெளியாகி அனைவரையும் கவர்ந்தது.

ஆதிக்கம் நிறைந்த

ஆதிக்கம் நிறைந்த

மிகச் சிறந்த இசை, மிகச் சிறந்த ஒளிப்பதிவு என எல்லாவற்றிலும் தனிச் சிறப்பைப் பெற்றுள்ள இந்த திரைப்படம் வெளியாகி பல்வேறு ரசிகர்களையும் கவர்ந்து, தேசிய அளவில் மிகப்பெரிய பார்வையை பெற்றது. இந்தியாவில் நடந்த கார்கில் போரை மையமாகக்கொண்டு எதிரி நாட்டிடம் இந்திய ராணுவ விமானியான கதாநாயகன் மாட்டிக் கொள்வதாகவும், அவ்வாறு மாட்டிக்கொண்ட கதாநாயகன் தனது காதலியை நினைத்துப் பார்ப்பதாகவும் ஆரம்பிக்கும் இந்த கதையில் ஆதிக்கம் நிறைந்த காதலன் கதாபாத்திரத்தில் கார்த்தியும், காதலனுக்காக ஒவ்வொரு நிலையிலும் சகித்து போகும் காதலியாக அதிதி ராவும் மிகச் சிறப்பாக நடித்திருப்பார்கள்.

சாய் பல்லவியை

சாய் பல்லவியை

இவ்வாறு ராணுவ விமானி மற்றும் டாக்டர் லீலா என இரு கதாபாத்திரங்களை மையமாகக் கொண்டு உருவான இந்த படத்தில் காதலி டாக்டர் லீலாவாக நடிகை அதிதி ராவ் நடித்திருப்பார் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்ததே ஆனால் இந்த படத்தில் அதிதி ராவுக்கு முன் முதலில் மணிரத்னம் நடிக்க வைப்பதாக இருந்தது நடிகை சாய் பல்லவியை தானாம்.

அசராத நடிப்பின்

அசராத நடிப்பின்

நடிப்பு, நடனம் என அனைத்திலும் வெளுத்து வாங்கும் நடிகை சாய் பல்லவி தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் தனது அசராத நடிப்பின் மூலம் வெளுத்து கட்டி வருகிறார். ஒவ்வொரு படங்களையும் பார்த்து பார்த்து தேர்வு செய்து நடித்துவரும் சாய்பல்லவி இந்திய அளவில் பல ரசிகர்களை பெற்று முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தேவதை போல

தேவதை போல

இந்நிலையில் இப்போது கசிந்த இந்த காற்று வெளியிடை திரைப்படத்தின் செய்தி பல்வேறு ரசிகர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. காற்று வெளியிடை திரைப்படத்தில் ஆதிதி ராவ்வை மிக அற்புதமாக படம் பிடித்து தேவதை போல காட்டி இருந்த நிலையில் இயக்குனர் மணிரத்னம் முடிவு செய்ததை போல ஒருவேளை சாய்பல்லவி நடித்திருந்தால் எவ்வாறு இருந்திருக்கும் என ரசிகர்கள் வலைதளங்களில் மெச்சி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X