நான் அவரை நேசிக்கிறேன்.. ஏ.ஆர்.ரஹ்மானை பிரிந்தது ஏன்? சாய்ரா பானு விளக்கம்!

சென்னை: இசைப்புயல் ஏஆர் ரஹ்மானின் மனைவி சாய்ரா பானு தனது கணவரை பிரிவதாக அறிவித்து இருந்தார். அவரின் இந்த அறிவிப்பு ரசிகர்களை மட்டுமில்லாமல் திரைத்துறையினரையும் பேரும் சோகத்தில் ஆழ்த்தியது. மேலும் பிரிவுக்கான காரணம் குறித்து பல வதந்திகள் பரவிய நிலையில், ஏஆர் ரஹ்மானின் மனைவி சாய்ரா பானு பிரிவுக்கான காரணத்தை கூறியுள்ளார்.

ஏ ஆர் ரஹ்மான் சாய்ரா பானுவை 1995ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு கதீஜா, ரஹீமா மற்றும் அமீன் ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்த தம்பதியினருக்கு மார்ச் மாதம் வந்தால், திருமணமாகி 30 ஆண்டுகள் ஆக இருக்கும் நிலையில் ஏஆர் ரஹ்மானின் மனைவி சாய்ரா பானு கணவரை பிரிந்து வாழ முடிவு செய்வதாக முடிவு செய்து வழக்கறிஞர் மூலம், பத்திரிகையாளர்களுக்கு அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

a r rahman saira banu dirvorce

வேதனையான முடிவு: அதில், திருமணமாகி பல வருடங்கள் கழித்து, கணவர் ஏ.ஆர்.ரஹ்மானிடமிருந்து பிரிந்து செல்லும் கடினமான முடிவை எடுத்துள்ளேன். இந்த முடிவு பெரும் அழுத்தத்திற்குப் பிறகு எடுத்த முடிவாகும். நாங்கள் ஒருவரையொருவர் ஆழமாக நேசித்த போதிலும், எங்களுக்கு இடையில், நிரப்ப முடியாத இடைவெளி இருந்ததால் இந்த முடிவை எடுத்துள்ளேன். வலி மற்றும் மிகுந்த வேதனையில் தான் இந்த முடிவை எடுத்துள்ளேன் என சாய்ரா பானு அந்த அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார்.

கன்னியமானவர்: பலரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்திய இந்த செய்தி வெளியானது, இவர்களின் குடும்ப விஷயம் சோஷியல் மீடியாவில் பெரும் விவாதத்திற்கு உள்ளானது. மேலும், ஏ.ஆர்.ரஹ்மானிடம் பேசிஸ்டாக இருக்கும் மோஹினி டே, தனது கணவரை பிரிந்துவிட்டதாக அறிவித்ததை தொடர்ந்து, சமூகவலைதளங்களில் ஏ.ஆர்.ரஹ்மான் குறித்து வதந்திகள் மற்றும் அவதூறாக கருத்துக்கள் பரவத்தொடங்கின. பிரபலங்கள் பலர் ஏ.ஆர்.ரஹ்மான் கன்னியமானவர், அப்படிப்பட்டவர் இல்லை என பதிலடி கொடுத்தாலும், அவர் மீதான விமர்சனங்கள் தொடர்ந்து வந்த நிலையில், தன் குடும்பம் குறித்து வரும் அவதூறு செய்கிகள் மற்றும் வீடியோக்களை உடனடியாக நீக்க வேண்டும் என்று ஏ.ஆர்.ரஹ்மான நோட்டீஸ் அனுப்பினார்.

நான் அவரை நேசிக்கிறேன்: இந்நிலையில், ஏஆர் ரஹ்மானின் மனைவி சாய்ரா பானு, கணவரை பிரிந்ததற்கான காரணத்தை ஆடியோவில் கூறியுள்ளார். அதில், கடந்த சில மாதமாக எனக்கு உடல்நிலை சரியில்லாததால், மும்பையில் சிகிச்சை பெற்று வருகிறேன். இதனால் தான் ஏஆர் ரஹ்மானை பிரிய முடிவு எடுத்தேன். அவருக்கு யாருடனும் எந்தவிதமான தொடர்பும் கிடையாது. அவர் மீது நான் வைத்து இருக்கும் நம்பிக்கை மிகப்பெரியது. அந்த அளவிற்கு அவர் சிறந்த மனிதர், நான் அவரை அந்த அளவிற்கு நேசிக்கிறேன். அவரும் என் மீது அதே அளவு காதலை வைத்து இருக்கிறார். எங்கள் இருவருக்கும் தற்போது ஒரு பிரேக் தேவைப்படுவதால், இந்த முடிவை எடுத்துள்ளோம். தயவு செய்து அவர் மீது தவறான செய்திகளை பரப்பாதீர்கள் என்று அந்த ஆடியோவில் சாய்ரா பானு பிரிவுக்கான விளக்கத்தை அளித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X