ஹாட்ஸ்டார் வெப்சீரிஸ்.. புது ரூட்டை பிடித்த ’சைரத்’பட நாயகி.. இதுதான் ஃபியூச்சராம்!
மும்பை: நாகராஜ் மஞ்சுளே இயக்கத்தில் 4 கோடி ரூபாயில் எடுக்கப்பட்ட சைரத் திரைப்படம் 110 கோடி ரூபாய் வசூலித்து பிரம்மாண்ட சாதனை படைத்தது.
ஆணவ கொலையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அந்த படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான நடிகை ரிங்கு ராஜ்குரு, தற்போது வெப்சீரிஸ் ஒன்றில் நடித்துள்ளார்.

ஹாட்ஸ்டாரில் விரைவில் ஒளிபரப்பாகவுள்ள Hundred எனும் வெப்சீரிஸில், நடிகை லாரா தத்தா, கரண் வாஹி உள்ளிட்டோருடன் இணைந்து நடித்துள்ளார்.
சமீபத்தில் தனது வெப்சீரிஸ் படக்குழுவுடன் நடிகை ரிங்கு பேசிய வீடியோ கான்ஃபரங்ஸிங்கை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு, வெப்சீரிஸுக்கான விளம்பரத்தை ஆரம்பித்துள்ளார்.

மேலும், முதன்முறையாக வெப்சீரிஸ் பக்கம் திரும்பியுள்ள ரிங்கு ராஜ்குரு, கொரோனா வைரஸ் மூலம் ஒட்டு மொத்த திரையுலகினருக்கும் இப்படியான ஒரு நெருக்கடியான சூழல் உருவாகி இருக்கிறது.
இந்நிலையில், வளர்ந்து வரும் ஆன்லைன் ஸ்ட்ரீமிங்கே எதிர்காலமாகவும் வாய்புகள் அதிகமாக காணப்படுவதாக சைரத் நாயகி தெரிவித்துள்ளார்.
வெப்சீரிஸ் மட்டுமின்றி, ரிங்கு ராஜ்குரு நடிப்பில் உருவாகி உள்ள மேக்கப் எனும் மராத்தி படமும் ரெடி ஆகி இருக்கிறது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அந்த படத்தின் ரிலீசும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆத்வ ரங் பிரேமாச்சா எனும் படத்திலும் ரிங்கு நடித்துள்ளார். இந்த மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த அந்த படத்தின் ரிலீசும் தேதி குறிப்பிடாமல் தள்ளிப் போயுள்ளது.


Click it and Unblock the Notifications











