குட் பேட் அக்லி முதல் டோட்டல் கோலிவுட் பாக்ஸ் ஆபீஸை பஞ்சர் பண்ண சையாரா.. இத்தனை கோடி வசூலா?
சென்னை: இந்த ஆண்டு இதுவரை வெளியான கோலிவுட் படங்களின் வசூலை பின்னுக்குத்தள்ளி வாரிசு நடிகரான ஆஹான் பாண்டே நடித்த சையாரா திரைப்படம் சாதனை புரிந்துள்ளது. கடந்த ஆண்டு தேஜா சஜ்ஜா நடிப்பில் தெலுங்கில் வெளியான ஹனுமான் திரைப்படம் அதிரடியாக 300 கோடி வசூல் ஈட்டிய நிலையில், சையாரா திரைப்படம் உலகளவில் 300 கோடி வசூலை அதிவேகமாக கடந்துள்ளது ஒட்டுமொத்த திரையுலகையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
கோலிவுட்டில் இந்த ஆண்டு விஜய், கார்த்தியை தவிர அனைத்து டாப் நடிகர்களின் படங்களும் வெளியாகின்றன. அஜித் குமாரின் 2 படங்கள், கமல்ஹாசன், சிம்பு நடித்த தக் லைஃப், சூர்யாவின் ரெட்ரோ என இதுவரை வெளியான பெரிய படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு பெரிய வசூலை ஈட்டவில்லை.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார், த்ரிஷா நடித்த குட் பேட் அக்லி படம் தான் 240 கோடி அளவுக்கு வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், அந்த படத்தின் வசூலையே சையாரா சைடு கிக் கொடுத்து பின்னுக்குத்தள்ளி முந்தியுள்ளது.
முதலிடத்தில் சாவா: இந்த ஆண்டு இந்தியில் வெளியான படங்களிலேயே பிப்ரவரி மாதம் விக்கி கவுஷல், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான சாவா திரைப்படம் தான் 600 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளது. சல்மான் கானின் சிக்கந்தர், அக்ஷய் குமாரின் ஸ்கை ஃபோர்ஸ், அமீர்கானின் சித்தாரே ஜமீன் பர் உள்ளிட்ட மற்ற படங்கள் 200 கோடி ரூபாய் வசூலை கூட தொடவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது.
300 கோடி வசூல் செய்த சையாரா: சாவா படத்தைத் தொடர்ந்து பாலிவுட் ரசிகர்கள் மொத்த பேரையும் தியேட்டருக்குத் தட்டி எழுப்பி வந்த வேலையை சையாரா திரைப்படம் பார்த்துள்ளது. பாலிவுட்டில் நெபோடிசம் சர்ச்சை ஒருபக்கம் ஓடிக் கொண்டிருந்தாலும், ஆஷிக் பாணியிலான படங்களை பார்க்க ரசிகர்கள் இன்னமும் ஆர்வமாக உள்ளனர் என்பதை சையாரா மீண்டும் நிரூபித்திருக்கிறது. அனன்யா பாண்டேவின் சகோதரர் ஆஹான் பாண்டே மற்றும் அனீத் படா நடிப்பில் ஜூலை 18ம் தேதி வெளியான சையாரா திரைப்படம் 10 நாட்களில் 300 கோடி ரூபாய் வசூலை உலகளவில் கடந்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
குட் பேட் அக்லியை முந்தியது: இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் இதுவரை வெளியான படங்களிலேயே அஜித் குமாரின் குட் பேட் அக்லி திரைப்படம் தான் அதிக வசூல். சுமார் 240 கோடிக்கும் அதிகமான வசூலை அந்த படம் அள்ளியதாக தகவல்கள் வெளியாகின. டிராகன் திரைப்படம் 150 கோடி, விடாமுயற்சி 100 கோடி, டூரிஸ்ட் ஃபேமிலி 90 கோடி என வசூல் செய்த நிலையில், பாலிவுட்டில் இளம் நடிகர்கள் நடித்த சையாரா திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் பல சாதனைகளை படைத்து வருகிறது. தமிழ் சினிமாவிலும் இந்த ஆண்டு பல வாரிசு நடிகர்களின் படங்கள் வெளியானாலும் ஒரு படம் கூட வசூல் ரீதியாக வெற்றிப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆகஸ்ட் 14ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள கூலி படம் தான் கோலிவுட்டின் மானத்தை காப்பாற்ற வேண்டும்.


Click it and Unblock the Notifications











