ஆபாச ஜோக்கடிப்பார், பெண்களிடம் மோசமாக நடப்பார்: இயக்குனர் பற்றி நடிகை பரபரப்பு தகவல்

By Siva

மும்பை: இயக்குனர் சஜித் கான் கேவலமான ஜோக்குகள் சொல்வார், பெண்களிடம் மோசமாக நடந்து கொள்வார் என்று நடிகை பிபாஷா பாசு தெரிவித்துள்ளார்.

பாலிவுட் இயக்குனர் சஜித் கான் மீது நடிகைகள், பெண் பத்திரிகையாளர் ஆகியோர் பாலியல் புகார் தெரிவித்துள்ளனர். அவரின் இந்த செயல் அதிர்ச்சி அளிப்பதாக சஜித் கானின் குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சஜித் கான் இயக்கிய ஹம்ஷகல்ஸ் படத்தில் நடித்த பிபாஷா பாசு அவர் பற்றி பேசியுள்ளார். சஜித் பற்றி அவர் கூறியதாவது,

சஜித் கான்

சஜித் கான்

ஹம்ஷகல்ஸ் படத்தில் நடித்தபோது சஜித் கானால் எனக்கு எந்த பாலியல் தொல்லையும் ஏற்படவில்லை. அதிகாரம் படைத்த ஆண்கள் செய்த தவறுகள் பற்றி பெண்கள் துணிச்சலாக பேசுவதை வரவேற்கிறேன். ஆனால் அது போன்று எனக்கு எதுவும் நடக்கவில்லை. சஜித்
படப்பிடிப்பின்போது பெண்களிடம் நடந்து கொள்ளும் விதம் எனக்கு பிடிக்காது.

மோசம்

மோசம்

சஜித் அசிங்கமான ஜோக்குகள் சொல்வார். மேலும் பெண்களிடம் முரட்டுத்தனமாக நடந்து கொள்வார். அவரிடம் எதுவும் சொல்லி அவர் அளவுக்கு தரம் தாழ்ந்து போக வேண்டாம் என்று என்னிடம் எச்சரித்திருந்தார்கள். அதனால் நான் அவர் படத்தில் நடித்தபோது அமைதியாக இருந்துவிட்டேன். இனியும் அவர் படத்தில் நடிக்க முடியாது. நான் அவருடன் வேலை செய்தால் பொறுமையை இழந்துவிடுவேன் என்று தயாரிப்பாளர்களிடம் தெரிவித்தேன் என்றார் பிபாஷா.

பட விளம்பரம்

பட விளம்பரம்

ஹம்ஷகல்ஸ் படத்தில் நடித்தபோது பிபாஷா பாசுவுக்கும், சஜித் கானுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதையடுத்து பிபாஷா படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவில்லை. ஹம்ஷகல்ஸ் படத்தில் சயிப் அலி கான், ரித்தேஷ் தேஷ்முக், ராம் கபூர், இஷா குப்தா, தமன்னா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

அக்ஷய் குமார்

அக்ஷய் குமார்

அக்ஷய் குமார், நானா படேகர் உள்ளிட்டோரை வைத்து ஹவுஸ்ஃபுல் 4 படத்தை இயக்கி வந்தார் சஜித் கான். இந்நிலையில் தன் மீது பாலியல் புகார்கள் எழுந்ததை அடுத்து படத்தின் இயக்குனர் பொறுப்பில் இருந்து விலகிவிட்டார். முன்னதாக அக்ஷய் குமார் சஜித் கான் பற்றி கேள்விப்பட்டு படப்பிடிப்பை நிறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X