அந்த இயக்குனர் மோசமானவர், தள்ளியே இரு என்று எச்சரித்தார்கள்: நடிகை தகவல்

By Siva

மும்பை: இயக்குனர் சஜித் கான் பக்கமே போகாதே என்று பலர் தன்னை எச்சரித்ததாக நடிகை அம்ரிதா புரி தெரிவித்துள்ளார்.

பாலிவுட் இயக்குனர் சஜித் கான் மீது பெண் பத்திரிகையாளர் உள்பட பல பெண்கள் பாலியல் புகார் தெரிவித்துள்ளனர். பெண்கள் தன்னை தனி அறையில் சந்திக்க வந்தால் அவர்களிடம் தனது ஆணுறுப்பை காட்டி அசிங்கமாக பேசி, நடந்து கொண்டுள்ளார் அவர்.

இந்நிலையில் சஜித் கான் பற்றி பாலிவுட் நடிகை அம்ரிதா புரி கருத்து தெரிவித்துள்ளார்.

மோசம்

சஜித் கான் பெண்கள் விஷயத்தில் மோசமானவர் என்பது அனைவருக்கும் தெரியும். அவர் பெண்களிடம் நடந்து கொள்ளும் முறையை ஏற்றுக்கொள்ள முடியாது. சஜித் கானிடம் இருந்து தள்ளியே இருக்குமாறு என்னை எச்சரித்துள்ளார்கள். அப்படி இருக்கும் அவரின் குணம் பற்றி அவரின் குடும்பத்தார் மற்றும் திரைத்துறையினருக்கு தெரியாது என்பதை நம்ப முடியவில்லை என்கிறார் அம்ரிதா புரி.

ஃபர்ஹான் அக்தர்

அம்ரிதாவின் ட்வீட்டை பார்த்த பாலிவுட் நடிகரும், சஜித் கானின் உறவினருமான ஃபர்ஹான் அக்தர் பதில் அளித்துள்ளார். அவரின் குணம் தெரிந்தும் நானோ என் குடும்பத்தாரோ எதுவும் செய்யவில்லை என்கிற உங்களின் கருத்து கவலை அளிக்கிறது. உங்களின் கோபம் நியாயம். ஆனால் உங்களின் கதை அல்ல என்று கூறியுள்ளார்.

ஃபரா கான்

இது என் குடும்பத்தாருக்கு கடினமான நேரம். சில கடினமான பிரச்சனைகளை தீர்க்க வேண்டியுள்ளது. என் சகோதரர் இப்படி நடந்திருந்தால் அவர் நிறைய பரிகாரம் செய்ய வேண்டியுள்ளது. அவரின் இந்த நடத்தையை நான் எந்தவிதத்திலும் ஆதரிக்க மாட்டேன். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாக இருப்பேன் என்கிறார் சஜித் கானின் சகோதரியும், டான்ஸ் மாஸ்டருமான ஃபரா கான்.

பரிகாரம்

சஜித்தின் நடவடிக்கைகள் குறித்து அறிந்து நான் எவ்வளவு அதிர்ச்சியும், அதிருப்தியும், மனவேதனையும் அடைந்தேன் என்பதை விவரிக்க முடியாது. அவர் தனது நடவடிக்கைகளுக்கு பரிகாரம் செய்ய வேண்டும் என்கிறார் ஃபர்ஹான் அக்தர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X