பிறந்தநாளும் அதுவுமா இப்படி நடக்கும் என்று இந்த இயக்குனர் எதிர்பார்த்திருக்க மாட்டார்

By Siva

மும்பை: பாலிவுட் இயக்குனர் சஜித் கானின் பிறந்தநாளுக்கு அவருக்கு யாரும் வாழ்த்து கூட தெரிவிக்கவில்லையாம்.

பிரபல பாலிவுட் டான்ஸ் மாஸ்டர் ஃபரா கானின் சகோதரரும், இயக்குனருமான சஜித் கான் கடந்த 23ம் தேதி தனது 48வது பிறந்தநாளை கொண்டாடினார்.

இந்த பிறந்தநாள் அவரால் மறக்கவே முடியாத நாளாகிவிட்டது.

சஜித் கான்

சஜித் கான்

சஜித் கானின் பிறந்தநாள் அன்று ஒரு பிரபலம் கூட அவருக்கு போன் செய்து வாழ்த்தவில்லையாம். ட்விட்டரில் கூட யாருமே சஜித் கானை வாழ்த்தவில்லை. அவரை நேரில் சந்தித்து வாழ்த்தி பிரச்சனையில் சிக்க எந்த பிரபலமும் விரும்பவில்லை. பெரிய இயக்குனரை ஒருவர் கூட வாழ்த்தாததற்கு காரணம் உள்ளது.

நடிகைகள்

நடிகைகள்

சஜித் கான் மீது பல பெண்கள் பாலியல் புகார் தெரிவித்துள்ளனர். எதற்கெடுத்தாலும் ஆடையை அவிழ்த்துவிட்டு செக்ஸ் வைத்துக் கொள்ளும்படி அழைத்ததாக சஜித் கான் மீது பலர் குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில் தான் அவரின் பிறந்தநாளை யாரும் கண்டுகொள்ளவில்லை. வழக்கமாக சஜித் கான் பிறந்தாளுக்கு பெரிய பார்ட்டி கொடுப்பார். அந்த பார்ட்டியில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொள்வார்கள். ஆனால் இந்த ஆண்டு எந்த பார்ட்டியும் இல்லை. யாரும் வர மாட்டார்கள் என்பது அவருக்கு தெரிந்துவிட்டது.

வாழ்த்து

வாழ்த்து

ஒவ்வொரு ஆண்டும் சஜித் கானின் பிறந்தநாள் அன்று அவரின் செல்போனுக்கு கால் மேல் கால் வந்து பலரும் வாழ்த்துவார்கள். இந்த ஆண்டு அவர் போன் இருக்கும் இடமே தெரியவில்லை. ஒருவர் கூட அழைக்கவில்லை என்று அவருக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்துள்ளார். சஜிதை பாலிவுட்காரர்கள் ஒதுக்கி வைத்துவிட்டார்கள்.

மறுப்பு

மறுப்பு

தான் எந்த நடிகையிடமும் தவறாக நடந்து கொள்ளவில்லை என்று சாதித்து வருகிறார் சஜித் கான். அவர் படப்பிடிப்பு தளத்தில் மோசமாக நடந்து கொள்வார் என்று முன்னணி நடிகை ஒருவரே தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகைகள் மட்டும் அல்ல பேட்டி எடுக்க வந்த பெண் பத்திரிகையாளரிடம் கூட அவர் தவறாக நடந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X