சின்னப்புத்தி சின்னசாமி... இவர் தான் அஞ்சலியின் “தாய்மாமன்”
சென்னை: சுராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி நாயகனாக நடித்துள்ள படம் சகலகலா வல்லவன் அப்பாடக்கர். முன்னதாக இப்படம் அப்பாடக்கர் என்றே குறிப்பிடப் பட்டு வந்தது.
லட்சுமி மூவி மேக்கர்ஸ் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்படத்தைத் தயாரித்துள்ளது.
இப்படத்தில் ஜெயம் ரவிக்கு அஞ்சலி, திரிஷா என இரண்டு நாயகிகள். நடிகர் சூரி காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சின்னப்புத்தி சின்னசாமி...
சின்னப்புத்தி சின்னசாமி... இது தான் இப்படத்தில் சூரியின் கதாபாத்திரப் பெயர். படம் முழுவதும் ஜெயம்ரவிக்கு எதிராக காமெடி செய்யும் கதாபாத்திரமாம் சூரிக்கு. கதைப்படி சூரி அஞ்சலியின் தாய்மாமனாக நடித்துள்ளார்.

அஞ்சலிக்காக மோதல்...
அஞ்சலியை திருமணம் செய்து கொள்ள விரும்பும் கதாபாத்திரம் சூரிக்கு. கூடவே திரிஷாவுக்காகவும் ஜெயம் ரவியுடன் மோதுவாராம்.

என்னம்மா இப்டி பண்றீங்களேம்மா...
சூரி தவிர படத்தில் நான் கடவுள் ராஜேந்திரனும் இருக்கிறார். வில்லனாக அறிமுகமாகி, இடையில் காமெடியில் கலக்கிய ராஜேந்திரன் இப்படத்தில் போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார்.

மொட்டைத் தலை விவேக்...
விவேக்கும் இப்படத்தில் நடித்துள்ளார். மொட்டைத் தலையுடன் விவேக் இப்படத்தில் வருகிறார்.

காமெடி விருந்து...
சுராஜ் படங்கள் என்றாலே காமெடி கன்பார்ம். எனவே, வழக்கம் போல இப்படத்திலும் காமெடி விருந்து காத்திருக்கிறது எனப் படக்குழுவினர் கூறுகின்றனர்.

விரைவில் ரிலீஸ்...
இதனை உறுதி செய்வது போல், படத்தின் காட்சிகளில் காமெடி வாசம் வீசுகிறது. இப்படத்திற்கு சென்சாரில் யு சான்றிதழ் வழங்கப் பட்டுள்ளது. இம்மாதம் 30ம் தேதி இப்படம் ரிலீசாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











