twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சகலகலாவல்லவனா இல்லை வெறும் அப்பாடக்கர் தானா?

    By Manjula
    |

    சென்னை: ஜெயம் ரவிக்கு இந்த வருடம் உண்மையிலேயே ஜெயமான வருடம் தான் போல, ரோமியோ ஜூலியட் வெளியாகி இன்று 50 வது நாளைத் தொட்டு இருக்கிறது. இந்த நாளில் மேலும் ஒரு சிறப்பாக ஜெயம் ரவியின் சகலகலாவல்லவனும் வெளியாகி இருக்கிறது.

    எனவே டபுள் உற்சாகத்தில் திளைத்துக் கொண்டிருக்கிறார் ஜெயம் ரவி. மேலும் 325 திரையரங்குகளில் இன்று வெளியாகி இருக்கும் சகலகலாவல்லவன் திரைப்படம் ரசிகர்களைக் கவர்ந்து இருக்கிறது, படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என்று பாசிட்டிவ் விமர்சனங்களும் படத்திற்கு கிடைத்துள்ளன.

    ஜெயம் ரவியுடன் த்ரிஷா, அஞ்சலி, சூரி, விவேக் என ஏராளமான நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கும் இந்தப் படம் காமெடி + காதல் என்ற மிக்ஸிங்கில் எடுக்கப்பட்டு இருக்கிறது.

    படத்தில் காதல் இருந்தாலும் கூட காமெடியை சற்று அதிகமாகவே படம் முழுவதும் தூவியிருக்கிறார் இயக்குநர் சுராஜ், ஜெயம் ரவிக்கும் இயக்குநர் சுராஜிற்கும் சகலகலாவல்லவன் கைகொடுத்திருக்கிறதா? பார்க்கலாம்.

    சகலகலாவல்லவன் கதை

    சகலகலாவல்லவன் கதை

    ஜெயம் ரவியும் , சூரியும் பங்காளிகள் இருவருக்குமிடையில் பழைய பகையிருப்பதால் இருவரும் விரோதிகளாகத் திரிகின்றனர். ஊர் தேர்தல் வர அதில் இருவரும் போட்டியிட்டு தேர்தலில் யார் வெற்றி பெறுவது என்று மோதிக் கொள்ளுகின்றனர்.

    இந்நிலையில் சூரியின் மாமன் மகள் அஞ்சலியை உருகி உருகி காதலிக்கிறார் ஜெயம் ரவி. எல்லாம் நல்லபடியாகப் போய்க்கொண்டிருக்கும் நேரத்தில், த்ரிஷாவின் ரூபத்தில் ஜெயம் ரவிக்கு வில்லங்கம் வருகின்றது.

    ஜெயம் ரவியின் மாமன் மகளான த்ரிஷாவின் திருமணம் சில காரணங்களால் நின்று போக, சூழ்நிலை காரணமாக அஞ்சலியை மறந்து த்ரிஷாவை கைபிடிக்கிறார் ஜெயம் ரவி. திருமணத்திற்குப் பின் சண்டைக் கோழிகளாக மாறும் இருவரும் விவாகரத்து வரை செல்கின்றனர்.

    ஜெயம் ரவி த்ரிஷா உறவு விவாகரத்தில் முடிந்ததா? இல்லை இருவரும் மீண்டும் ஒன்று சேர்ந்தார்களா என்பதை காமெடி கலந்து சொல்லியிருக்கிறார் இயக்குநர் சுராஜ்.

    ஜெயம் ரவி

    ஜெயம் ரவி

    ரோமியோ ஜூலியட்டின் வெற்றி ஜெயம் ரவியை உற்சாக ரவியாக மாற்றியிருக்கிறது, முதல்முறையாக ஒரு முழுநீள காமெடிப் படத்தில் நடித்திருக்கிறார் ஜெயம் ரவி. சூரியுடன் காமெடி, அஞ்சலியுடன் காதல் மற்றும் த்ரிஷாவுடன் சண்டை என வீடுகட்டி அடித்திருக்கிறார் மனிதர்.

    த்ரிஷா

    த்ரிஷா

    உனக்கும் எனக்கும் திரைப்படத்தில் ஜெயம்ரவியை உருகி உருகி காதலித்த த்ரிஷா, இந்தப் படத்தில் ஜெயம் ரவியின் மனைவியாக வந்து அவரை டார்ச்சர் செய்திருக்கிறார். 2 நாயகிகள் என்றாலும் கூட த்ரிஷாவிற்கே படத்தில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது.

    அஞ்சலி

    அஞ்சலி

    தமிழ் சினிமாவில் தனது 2 வது இன்னிங்சை ஆரம்பித்திருக்கும் அஞ்சலி இந்தப் படத்தில் கிளாமருக்கு மட்டுமே பயன்படுத்தப் பட்டிருக்கிறார். ஜெயம் ரவியுடனான காதல் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன.

    காப்பாற்றிய காமெடிக் கூட்டணி

    காப்பாற்றிய காமெடிக் கூட்டணி

    சகலகலாவல்லவனை காப்பாற்றியதில் பெரும்பங்கு காமெடிக்கு தான் போய் சேரும். சூரி, விவேக், மொட்டை ராஜேந்திரன் இவர்களுடன் இணைந்து ஜெயம் ரவியும் காமெடி பண்ணியதில் படம் காப்பாற்றப்பட்டிருக்கிறது.

    சுராஜ்

    சுராஜ்

    குரு சுந்தர். சி பாணியில் காமெடி, குடும்ப செண்டிமெண்ட், காதல் போன்றவைகளை கையில் எடுத்து அதில் வெற்றியும் பெற்று விட்டார். ஆனால் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம் என்று விளம்பரப்படுத்தியவர்கள் படத்தில் இடம்பெறும் இரட்டை அர்த்த வசனங்களை கொஞ்சம் தவிர்த்திருந்தால், படம் பெண் ரசிகைகளின் நெஞ்சங்களையும் கவர்ந்து இருக்கும்.

    தடைக்கற்களாக மாறிய பாடல்கள்

    தடைக்கற்களாக மாறிய பாடல்கள்


    சகலகலாவல்லவன் வெற்றிப் பயணத்தில் பெரிய தடையாக இருப்பது பாடல்கள் தான். கொஞ்சம் தெலுங்கு வாடை அடித்தால் பரவாயில்லை முழுவதுமாக தெலுங்குப் பாடல்களை தமிழ்ப் பாடல்களாக மாற்றியது போல ஒட்டுமொத்த பாடல்களும் இருக்கின்றன. தமனின் இசை, முடியல பாஸ்.

    மொத்தத்தில் காமெடியால் கரைசேர்ந்திருக்கிறது சகலகலாவல்லவன்....

    English summary
    Jayam Ravi, Trisha and Anjali starrer "Sakalakala Vallavan", is a romantic-comedy movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X