Don't Miss!
- News தமிழகத்தின் 11 ஸ்டார் தொகுதிகளில் ஓட்டு சதவீதம் எவ்வளவு தெரியுமா? இதோ லிஸ்ட்
- Finance தூத்துக்குடி நிறுவனத்தை அலேக்கா வாங்கிய அதானி.. மாஸ்டர் பிளான் உடன் களமிறங்கிய கௌதம் அதானி..!!
- Lifestyle நீங்கள் குழந்தைகளுக்கு செர்லாக் உணவளிக்கிறீர்களா? இனி கவனமாக இருங்கள்..!
- Technology Airtel-னா சும்மாவா.. அம்பானியை ஓவர் டேக் செய்வீங்க போலயே.. ரூ.300 விலை வரம்பில் கிடைக்கும் பெஸ்ட் திட்டங்கள்..
- Sports LSG vs CSK : தோனி மாதிரி இல்லப்பா.. ரசிகர்கள் பேச்சை கேட்ட ருதுராஜ்.. சிஎஸ்கே அணியில் 2 மாற்றங்கள்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
யுவன் பாட.. சந்தானம் ஆட.. சிம்பு மியூசிக் போட.. ஒரே கூத்துதான்! - 'காதல் தேவதை' லிரிக்கல் வீடியோ
சென்னை : சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் 'சக்க போடு போடு ராஜா' படத்திற்காக முதன்முதலாக, சிம்பு இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இந்தப் படத்தில் ஒரு பாடலை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா பாடியிருக்கிறார். இன்னொரு பாடலை அனிருத் பாடியிருக்கிறார்.
அறிமுக இயக்குநர் சேதுராமன் இயக்கத்தில், நகைச்சுவை நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகி வரும் படம் 'சக்க போடு போடு ராஜா.' இந்தப் படத்தில் நாயகியாக வைபவி சாண்டில்யா நடித்துள்ளார். வி.டி.வி கணேஷ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.
We're sure #KadhalDevathai in @thisisysr's voice is stuck in your head, check out the lyric video now➡️https://t.co/8NM9Q3DKT3 pic.twitter.com/xmfMlzsLyn
— Sony Music South (@SonyMusicSouth) October 25, 2017
இசையமைப்பாளராக சிம்பு அறிமுகமாகும் படம் என்பதால், அதன் அறிவிப்பு வந்ததிலிருந்தே பாடல்களுக்கான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. தற்போது யுவன் பாடியிருக்கும் 'காதல் தேவதை' பாட்டின் லிரிக்கல் வீடியோ வெளியிடப்பட்டிருக்கிறது. இந்தப் பாடலை வைரமுத்து எழுதியிருக்கிறார்.
சந்தானம் நடிக்கும் படத்தில் சிம்பு, யுவன் ஷங்கர் ராஜா, அனிருத் என நண்பர்கள் இணைந்திருப்பதால் இந்தப் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.