மக்களை கவர இப்படி ஒரு தலைப்பு… “சர்க்கரை தூக்கலாய் ஒரு புன்னகை“... எப்போ ரிலீஸ் தெரியுமா?

சென்னை : புது முக நடிகர் ருத்ரா ஹீரோவாக நடிக்கும் திரைப்படம் சர்க்கரை தூக்கலாய் ஒரு புன்னகை..

தமிழ் சினிமாவுக்கு சர்வதேச அடையாளங்கள் கிடைப்பதில் இந்த முறை இடம் பிடித்திருக்கும் படம், சர்க்கரை தூக்கலாய் ஒரு புன்னகை.

இத்திரைப்படத்தில் ருத்ராவிற்கு ஜோடியாக சுபிக்ஷா நடிக்கிறார். இப்படத்தை மகேஷ் பத்மநாபன் இயக்கி உள்ளார்.

சுபிக்ஷா

சுபிக்ஷா

பாரதி ராஜாவின் அன்னக்கொடி படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானாலும் விஜய் மில்டனின் கடுகு படத்தின் மூலம் பரவலாக அறியப்பட்டார் சுபிக்ஷா. நேத்ரா, சீமத்தண்ணி, வேட்டை நாய், பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் உருவாகி வரும் யார் இவர்கள் எனப் பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

சர்க்கரை தூக்கலாய் ஒரு புன்னகை

சர்க்கரை தூக்கலாய் ஒரு புன்னகை

மகேஷ் பத்மநாபன் இயக்கத்தில் நுபாயிஸ் ரஹ்மான் உடன் இணைந்து நடித்துள்ள படம் 'சர்க்கரை தூக்கலாய் ஒரு புன்னகை'பொள்ளாச்சிக்கு அருகில் உள்ள வனப் பகுதியில் படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.

ஈகோ பிரச்சினை

ஈகோ பிரச்சினை

ஒலிப்பதிவாளரான கதாநாயகன் ஒரு ஆவணப்படத்திற்கு ஒலிப்பதிவு செய்யும் போது சில பிரச்சினைகளை சந்திக்கிறார். சென்னையைச் சேர்ந்த பண்பலை தொகுப்பாளினி அவரோடு பயணம் செய்கிறார். இவர்கள் இருவருக்கும் இடையே நடைபெறும் ஈகோ பிரச்சினைகள் பின் காதலாக மாறுவதை அடிப்படையாகக் கொண்டு இத்திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

திரைப்படவிழாவில்

திரைப்படவிழாவில்

சர்க்கரை தூக்கலாய் ஒரு புன்னகை என்ற இத்திரைப்படம் கோவா திரைப்பட விழாவிலும், சில்வர் ஸ்கிரீன் திரைப்பட விழாவிலும், மெக்சிகோ திரைப்படவிழா என பல திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பல பிரிவுகளில் ஆங்கிகாரத்தை பெற்றது.

டிசம்பர் 24ந் தேதி ரிலீஸ்

டிசம்பர் 24ந் தேதி ரிலீஸ்

மக்களை கவரவேண்டும் என்பதற்காகவே படத்துக்கு இப்படி ஒரு பெயர் சர்க்கரை தூக்கலாய் ஒரு புன்னகை சூட்டப்பட்டுள்ளது. இது ஒரு காதல் கதை என்பதால் இப்பெயர் பொருந்தி உள்ளது. இந்நிலையில், இத்திரைப்படம் டிசம்பர் 24ந் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X