சூப்பர் மாடல் டூ சூப்பர் மாம்.. கஸ்தூரிக்கு புகழாரம் சூட்டிய நடிகை!

Recommended Video

Bigg Boss 3 Tamil: Kasthuri oppose kamal comments

சென்னை: நடிகை கஸ்தூரியை பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த சாக்ஷி அகர்வால் சூப்பர் மாம் என புகழ்ந்துள்ளார்.

நடிகை சாக்ஷி அகர்வால் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார். கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு தொடர்ந்து சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார் சாக்ஷி அகர்வால். அண்மையில் தன்னுடைய சப்போர்ட் சேரன் சாருக்குதான் என்று பதிவிட்டிருந்தார் சாக்ஷி.

உங்கள் வார்த்தைகள்

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு என்ட்ரியாக நுழைந்து வெளியேறிய கஸ்தூரி குறித்தும் சாக்ஷி அகர்வால் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டிருக்கிறார். அதாவது, சூப்பர் மாடல் டூ சூப்பர் மாம் என்று பதிவிட்டுள்ள சாக்ஷி, உங்கள் வார்த்தைகளில் இருந்து வாழ்க்கையில் நீங்கள் கண்ட போராட்டத்தை புரிந்து கொள்ள முடிகிறது.

நானும் ஒருத்தி

நானும் ஒருத்தி

நீங்கள் பல பெண்களுக்கு உத்வேகமாக உள்ளீர்கள், அவர்களில் நானும் ஒருத்தி என்று பதிவிட்டிருக்கிறார் சாக்ஷி அகர்வால். பிக்பாஸ் வீட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியேறினார் கஸ்தூரி. கடந்த வாரம் நடந்த பள்ளிக்கூட டாஸ்க்கின் போது, தங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத ஆசிரியர்களை பற்றி ஹவுஸ்மேட்ஸ்கள் பகிர்ந்துகொண்டனர்.

மகள்கள் பேசும் ஆடியோ

மகள்கள் பேசும் ஆடியோ

அப்போது பேசிய கஸ்தூரி என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஆசிரியர் என்றால் என் மகள்தான் என்று உருக்கமாக பேசி கண்ணீர் விட்டார் கஸ்தூரி. இதைத்தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது மகள்கள் பேசும் ஆடியோ ஒலிபரப்பப்பட்டது.

வெளியேறிய கஸ்தூரி

வெளியேறிய கஸ்தூரி

அதனை கேட்டபோதே கண்ணீர்விட்டு கதறினார் கஸ்தூரி. இப்போதே கூப்பிடுங்கள் சார் நான் வெளியே வந்துவிடுகிறேன் என்றார். இதைத்தொடர்ந்து நிகழ்ச்சியின் இறுதியில் எவிக்ஷன் முறைப்படி கஸ்தூரியை வெளியே அழைத்தார் கமல்.

வேண்டவே வேண்டாம்

வேண்டவே வேண்டாம்

அப்போது சீக்ரெட் ரூமில் இருக்கிறீர்களா என்று கேள்விக் கேட்டார் கமல். அப்போது என் குழந்தைகளின் குரலை கேட்ட பிறகு இனி என்னால் இங்கு இருக்க முடியாது சார் என்று கூறி விட்டு பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து கஸ்தூரி வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X