பிக்பாஸ் சாக்ஷி அகர்வால் குஷியோ குஷி - ஆர்யா, சாயிஷா உடன் படத்தில் ஆக்டிங்
சென்னை: நடிகை சாக்ஷி அகர்வால் பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3ல் கலந்து கொண்ட பிறகு, அடுத்தடுத்து படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். சில நாட்களுக்கு முன்பு ஜி.வி.பிரகாஷுடன் ஆயிரம் ஜென்மங்கள் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். தற்போது ஆர்யா மற்றும் சாயிஷா நடிக்கும் டெடி படத்தில் நடிக்கவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
நாய்கள் ஜாக்கிரதை, மிருதன், டிக் டிக் டிக் ஆகிய படங்களை இயக்கிய சக்தி சவுந்தர் ராஜன் தற்போது டெடி என்ற படத்தை ஆர்யா மற்றும் அவரது மனைவி சயேஷாவை வைத்து இயக்கி வருகிறார் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார் டி.இமான்.

இந்த படத்தில் தற்போது புதிதாக இணைந்திருக்கிறார் சாக்ஷி அகர்வால். இந்த படத்தில் இவர்களுடன் சதீஷும் நடித்து வருகிறார். இப்படத்தை தயாரித்து வருகிறார் பிரபல தயாரிப்பாளரான கே.இ.ஞானவேல்ராஜா.
சாக்ஷி அகர்வால் தமிழ், கன்னடம், மலையாள சினிமாவில் நடித்தவர். இவர் தமிழில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்தவர். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பு வரை இவரை பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. காலா படத்தில் ரஜினிக்கு மருமகளாக நடித்திருந்தார்.

அதோடு சாக்ஷி அகர்வால் அட்லியின் ராஜா ராணி படத்தில் கூட ஒரு காட்சியில் நடித்திருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3ல் சாக்ஷி தன்னால் முடிந்த வரை அனைவரிடமும் நல்ல ஒத்துழைப்புடன் இருந்து வந்தார். ஏழு வாரங்கள் வரை அவர் பிக்பாஸ் வீட்டில் தாக்குப்பிடித்து இருந்தார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பு வரை தமிழ் சினிமாவில் கண்டுகொள்ளப்படாமலேயே இருந்தவர், இந்நிகழ்ச்சிக்கு பிறகு தொடர்ந்து படங்களில் நடிப்பதற்கும், டப்பிங்கிலும் பிஸியாகி வருகிறார்.
சாக்ஷி ஆக்சன் படத்திற்கு டப்பிங் செய்து வரும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி இருந்தது. சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் படம் தான் ஆக்சன். இப்படத்தில் விஷால், தமன்னா, ஜஸ்வர்யா லக்ஷ்மி, யோகி பாபு, அகன்ஷா புரி, ராம்கி போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார் ஹிப்ஹாப் தமிழா ஆதி.
அதோடு, சாக்ஷி ஜி.வி.பிரகாஷ் உடன் ஜோடியாக ஆயிரம் ஜென்மங்கள் படத்தில் நடித்து வருகிறார் .இந்த படம் ஹாரர் த்ரில்லராக உருவாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











