ம்ஹூம், வேண்டவே வேண்டாம்.. கண்ணியம் காக்க.. டிக்டாக் செயலியில் இருந்து விலகிய பிக்பாஸ் நடிகை!
சென்னை: பிரபல பிக்பாஸ் நடிகை, தனது டிக்டாக் கணக்கில் இருந்து தன்னை விலக்கி கொண்டார்.
இந்திய- சீன எல்லையில் உள்ள கல்வான் பகுதியில் ஏற்பட்ட மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டனர்.
சீன தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. பல வீரர்கள் பலியானதாகவும் 40 -க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

நடிகர், நடிகைகள்
இதையடுத்து, நாடு முழுவதும் சீன பொருட்களை புறக்கணிக்கக் கோரி போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சில நடிகர், நடிகைகள் சீனாவைச் சேர்ந்த டிக் டாக் செயலியில் இருந்து விலகியுள்ளனர். இசையமைப்பாளர் ஜிப்ரான் தனது டிக் டாக் மற்றும் சீன ஆப்களின் கணக்குகளை டெலிட் செய்துவிட்டதாக கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்திருந்தார்.

சாக்ஷி அகர்வால்
இந்நிலையில், பிரபல நடிகை சாக்ஷி அகர்வாலும் டிக்டாக் செயலியில் இருந்து விலகியுள்ளார். டிக்டாக்கில் அவரை 2.18 லட்சம் பேர் பின் தொடர்ந்தனர். இதுபற்றி அவர் கூறும்போது, 'பொறுமைக்கும் அமைதிக்கும் எடுத்துக்காட்டாக விளங்குவது நம் நாடு. சீனா அதை தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி நம் நிலத்தை அபகரிக்க பார்க்கிறது.

அகற்றியுள்ளேன்
எனவே நான் இனி சீனாவில் தயாரிக்கப்படும் பொருட்களை உபயோகப்படுத்த போவதில்லை என்றும் சீன தயாரிப்புகளின் விளம்பரங்களில் நடிப்பதில்லை என்றும் முடிவு செய்துள்ளேன். இதன் தொடக்கமாக, நான் எனது டிக்டாக் கணக்கை அகற்றியுள்ளேன். நாட்டின் கண்ணியத்தைத் காக்க ஒரு குடிமகளாக இதை செய்துள்ளேன் என்று கூறியுள்ளார்.
Recommended Video

சிண்ட்ரெல்லா
சாக்ஷி அகர்வால், தமிழில், ராஜா ராணி, ரஜினியின் காலா, அஜித்தின் விஸ்வாசம் உட்பட சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தவர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் இன்னும் அதிக பிரபலமடைந்தார். இப்போது, ராய் லட்சுமியுடன் சிண்ட்ரெல்லா, சக்தி சவுந்தரராஜன் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள டெடி, சுந்தர் சியின் அரண்மனை 3 படங்களில் நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











