சீக்கிரமே மிரட்ட வரும் அரண்மனை 3.. டப்பிங்கை முடித்த பிரபல நடிகை.. சும்மா ரவுண்டு கட்டி ஆடுறாங்களே!
சென்னை: நடிகை சாக்ஷி அகர்வால் அரண்மனை 3ம் பாகத்தின் டப்பிங்கை முடித்துள்ளார்.
இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான அரண்மனை முதல் இரு பாகங்கள் மிகப்பெரிய கமர்ஷியல் வெற்றியை பெற்றன.
இந்நிலையில், மூன்றாவது பாகத்தின் ஷூட்டிங் முடிந்து படத்தின் டப்பிங் பணிகள் நடந்து வருகின்றன.

காஞ்சனாவுக்கு போட்டி
தமிழ் சினிமாவில் காஞ்சனா பேய் சீரிஸ் படங்களுக்கு போட்டியாக அரண்மனை சீரிஸ் படங்கள் வெளியாகி வருகின்றன. பேய் கதையை காமெடி கலந்து ஒரு பக்கம் ராகவா லாரன்ஸ் கொடுத்து வந்தால், மறுபக்கம் சுந்தர்.சி காமெடி பிளஸ் கிளாமர் கலந்து மிரட்டி வருகிறார்.

அரண்மனை 3
அரண்மனை முதல் மற்றும் இரண்டாம் பாகத்தில் ஹன்சிகா லீடு ரோலில் நடித்து வந்தார். ஹன்சிகாவை தொடர்ந்து ஆண்ட்ரியா, திரிஷாவும் ஒவ்வொரு பாகங்களிலும் கலக்கினர். இந்நிலையில், மூன்றாவது பாகத்தில் நடிகர் ஆர்யா, ராஷி கன்னா, சாக்ஷி அகர்வால் உள்ளிட்டோர் லீடு ரோலில் நடித்துள்ளனர்.

டப்பிங்கை முடித்த சாக்ஷி
அரண்மனை 3ம் பாகத்தின் ஷூட்டிங் முடிந்த நிலையில், டப்பிங் பணியை படக்குழு முடுக்கி விட்டுள்ளது. சீக்கிரமே இந்த படத்தை திரைக்கு கொண்டு வரும் முயற்சியில் சுந்தர். சி ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், அரண்மனை 3ம் பாகத்தில் தனது போர்ஷன் டப்பிங்கை முடித்து விட்டதாக போட்டோவுடன் அறிவித்துள்ளார் நடிகை சாக்ஷி அகர்வால்.

என்ன ரோல்
அரண்மனை முதல் பாகத்தில் ராய் லக்ஷ்மியும், இரண்டாம் பாகத்தில் பூனம் பஜ்வாவும் கவர்ச்சியை காட்டி நடித்த நிலையில், மூன்றாவது பாகத்தில் அந்த ரோலில் நடிகை சாக்ஷி அகர்வால் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சோஷியல் மீடியாவில் கிளாமரில் கலக்கும் சாக்ஷி, அரண்மனை 3ல் என்ன செய்ய காத்திருக்கிறாரோ!
Recommended Video

கவர்ச்சி அட்டகாசம்
சின்ன சின்ன ரோலில் தொடங்கி, பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு வில்லி, ஹீரோயின், முக்கிய ரோல் என கலக்கி வருகிறார் சாக்ஷி அகர்வால். மேலும், இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி அட்டகாசம் செய்து ஏகப்பட்ட ஹாட் போட்டோக்களை தினமும் இறக்கி ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











