Sakshi Agarwal Wedding: சாக்‌ஷி அகர்வாலுக்கு டும் டும் டும்.. சிறுவயது காதலரைக் கரம் பிடித்தார்!

கோவா: நடிகை சாக்‌ஷி அகர்வால் தனது சிறுவயது காதலர் நவனீத்தை கோவாவில் உள்ள, தனியார் ஓட்டலில் இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இது தொடர்பான புகைப்படங்களை அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், தனது சிறுவயது காதலை கரம் பிடித்துவிட்டதாக தெரிவித்துள்ளார். யாருக்கும் சொல்லாமல், எந்தவிதமான ஆர்ப்பாட்டமும் இல்லாமல், சாக்‌ஷி அகர்வாலுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களது திருமணத்தில் இருவீட்டாரின் குடும்பத்தார், நெருங்கிய உறவினர்கள், நெருக்கமான நண்பர்கள் என வெகு சிலரே கலந்து கொண்டுள்ளனர் என கூறப்படுகின்றது.

நடிகை சாக்‌ஷி அகர்வால் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராகவும் கவனம் பெறும் நடிகைகளில் ஒருவராகவும் உள்ளார். சூப்பர் ஸ்டாருடன் காலா படத்தில் அவரது மருமகள் கதாபாத்திரத்தில் நடித்தார். தொடர்ந்து கதாநாயகியாக தமிழ் சினிமாவில் வளம் வரவேண்டுமென நினைத்த சாக்‌ஷி அதற்கான முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார்.

sakshi agarwal sakshi agarwal wedding sakshi agarwal marriage

சாக்‌ஷி அகர்வால்: பிக் பாஸ் போட்டியிலும் கலந்து கொண்டு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். தனது சமூக வலைதளப் பக்கங்களில் செம ஆக்டிவாக இருக்கும் சாக்‌ஷி அகர்வால், சில மாதங்களுக்கு முன்னர் ட்விட்டர் தளத்தை வன்மத்தை கக்கும் வலைதளம் என காட்டமாக விமர்சித்தது பலரது கவனத்தை ஈர்த்தது.

sakshi agarwal sakshi agarwal wedding sakshi agarwal marriage

இன்ஸ்டா: இதுமட்டும் இல்லாமல், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம ஆக்டிவாக இருக்கும் சாக்‌ஷி அகர்வால், தொடர்ந்து தனது புகைப்படங்களைப் பதிவிட்டு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். அதிலும், தனது ஹோம்லியான மற்றும் செம கிளாமரான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இது மட்டும் இல்லாமல், தனது இஸ்டாகிராம் பக்கத்தில் தனது திருமணம் குறித்து எதுவுமே பதிவிடாத சாக்‌ஷி அகர்வால் திடீரென தனது திருமண புகைப்படங்களைப் பதிவிட்டதும் ரசிகர்கள் அதிர்ந்துவிட்டார்கள். இவரை இன்ஸ்டாகிராமில் மட்டும் சுமார், 2 கோடியே 10 லட்சம் ரசிகர்கள் பின் தொடருகின்றனர்.

sakshi agarwal sakshi agarwal wedding sakshi agarwal marriage

திருமணம்: சாக்‌ஷி அகர்வால் தனது சிறுவயது காதலர் நவனீத்தை கோவாவில் உள்ள, தனியார் ஓட்டலில் இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இது தொடர்பான புகைப்படங்களை அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், தனது சிறுவயது காதலை கரம் பிடித்துவிட்டதாக தெரிவித்துள்ளார். யாருக்கும் சொல்லாமல், எந்தவிதமான ஆர்ப்பாட்டமும் இல்லாமல், சாக்‌ஷி அகர்வாலுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களது திருமணத்தில் இருவீட்டாரின் குடும்பத்தார், நெருங்கிய உறவினர்கள், நெருக்கமான நண்பர்கள் என வெகு சிலரே கலந்து கொண்டுள்ளனர் என கூறப்படுகின்றது.

sakshi agarwal sakshi agarwal wedding sakshi agarwal marriage

sakshi agarwal sakshi agarwal wedding sakshi agarwal marriage

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X