திருமணத்து பின்னும் இப்படியா? கவர்ச்சி தரிசனம் காட்டிய சாக்ஷி அகர்வால்!

சென்னை: வட மாநிலத்தைச் சேர்ந்த சாக்ஷி அகர்வால், ராஜஸ்தானைச் சேர்ந்த தந்தைக்கும், பஞ்சாப்பைச் சேர்ந்த தாயுக்கும் பிறந்தார். இவர் பிறந்தது வடமாநிலமாக இருந்தாலும், சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் சேவியர் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்டில் எம்.பி.ஏ. படித்தார். பெரிய கம்பேனி ஒன்றில் HR ஆக இருந்த சாக்ஷி, மாடலிங் துறையில் இருந்த ஆர்வத்தால் சினிமாவில் நடிக்க வந்தார்.

மாடலிங்கில் ஒரு சில தொலைக்காட்சி விளம்பரப் படங்களில் நடித்த இவர், சினிமா வாய்ப்பை தேடி அலைந்த போது தான், அட்லீ இயக்கத்தில் வெளியான ராஜா ராணி படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அந்த படத்தில் நான் நடித்து இருக்கவே கூடாது, ஒரு நல்ல கதாபாத்திரம் படம் முழுக்க வருவீர்க என்று சொல்லித்தான் அழைத்தார்கள். ஆனால், கடைசியில் என்னை காமெடி பீசாக்கி விட்டார்கள். படம் ரிலீஸ் ஆன பின் தான் இந்த விஷயமே எனக்கு தெரிந்தது என்று புலம்பி இருந்தார்.

sakshi agarwal photo
Photo Credit:

ஃபயர் : அந்த படத்தை தொடர்ந்து ஒரு சில படத்தில் நடித்து வந்த சாக்ஷி அகர்வால், பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில், சாக்ஷி அகர்வால் கலந்து கொண்டார். அதன் பின் டெடி, அரண்மனை 3, விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் உருவான நான் கடவுள் இல்லை போன்ற படத்தில் ஒரு முக்கியமான ரோலில் நடித்தார். அண்மையில், வெளியான ஃபயர் படத்தில் ஒரு அட்டகாசமான ரோலில் அதீத கவர்ச்சியுடன் நடித்திருந்தார்.

கவர்ச்சி தரிசணம்: இதையடுத்து கடந்த ஆண்டு நடிகை சாக்ஷி, தன்னுடைய நண்பரான நவனீத் மிஸ்ரா காதலித்து வந்த நிலையில் அவரை கரம்பிடித்துள்ளார். இவர்களின் திருமணம் கோவாவில் நட்சத்திர ஹோட்டலில் தடபுடலாக நடந்தது. திருமணம் முடிந்த கையோடு சாக்ஷி அகர்வால், கணவருடன் ஹனிமூன் செல்லாமல், ஃபயர் படத்தின் ப்ரோமோஷனில் கலந்து கொண்டார். படம் வெளியான பின் தான் திருமணமாகி இரண்டு மாதத்திற்கு பிறகு தனது கணவருடன் ஹனிமூன் சென்றார். இந்நிலையில் சாக்ஷி அகர்வால் திருமணமானதை மறந்துவிட்டு, இப்போது கவர்ச்சியில் விதவிதமாக போஸ் கொடுத்து வருகிறார். அந்த போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X