அட இது எப்ப..? ஹாலிவுட்டில் அறிமுகமாகும் பிரபல பிக் பாஸ் நடிகை.. பாரதிராஜா வாழ்த்து!

By

சென்னை: பிரபல பிக் பாஸ் நடிகை, ஹாலிவுட் படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படம் மூலம் அவர் ஹாலிவுட்டில் அறிமுகமாகிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி, சில நடிகைகளை சினிமாவுக்கு தந்திருக்கிறது.

அதில் பங்கேற்ற நடிகைகள், சினிமா, மற்றும் சின்னத்திரை தொடர்களில் நடித்து வருகின்றனர்.

அட்லியின் ராஜா ராணி

அட்லியின் ராஜா ராணி

அவர்களுக்கு அதிக புகழும் கிடைத்து வருகிறது. இந்நிலையில், பிக்பாஸ் சீசன் 3 மூலம் புகழ் பெற்றவர் நடிகை சாக்‌ஷி அகர்வால். அட்லி இயக்கிய ராஜா ராணி, ரஜினியின் காலா, அஜித்தின் விஸ்வாசம் உட்பட சில படங்களில் நடித்துள்ளார். சின்ட்ரெல்லா, சக்தி சவுந்தரராஜன் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள டெடி உட்பட சில படங்களில் நடித்து வருகிறார்.

120 ஹவர்ஸ்

120 ஹவர்ஸ்

சுந்தர்.சியின் அரண்மனை 3 உட்பட சில படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையே என்.டி.நந்தா இயக்கிய 120 ஹவர்ஸ் என்ற படத்தில் நடித்துள்ளார், சாக்‌ஷி அகர்வால். இதில் பிரணய் காளியப்பன் உட்பட பலர் நடித்துள்ளனர். இதன் டிரைலரை இயக்குனர் பாரதிராஜா வெளியிட்டார். என்.டி.நந்தா, இதற்கு முன் வல்லதேசம், ஒரு கணம் படங்களை இயக்கியவர் நந்தா.

வெற்றி இயக்குநராக

வெற்றி இயக்குநராக

'உலக சினிமாக்களைப் பார்த்து வியக்கும் தமிழர்கள், உலக சினிமாக்களையே இப்போது இயக்கிக் கொண்டிருக்கிறார்கள். இயக்குனர் நந்தா ஹாலிவுட்டில் வெற்றி இயக்குநராக வலம் வரவேண்டும். டிரைலர் நன்றாக இருக்கிறது' என்று பாரதிராஜா வாழ்த்தியுள்ளார்.

ஹாலிவுட் அறிமுகம்

ஹாலிவுட் அறிமுகம்

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் சாக்‌ஷி அகர்வால், உலகத் தமிழர்கள் மத்தியில் பிரபலம். இதையடுத்து அவர் திறமையைப் பார்த்து, ஹாலிவுட்டில் அறிமுகம் செய்திருக்கிறார் நந்தா. சாக்ஷி அகர்வாலின் இந்த அறிமுகம், அவரை சினிமாவின் அடுத்த தளத்திற்கு கொண்டு செல்லும் என்று இயக்குனர் நந்தா கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X