இப்படி ஒரு காலு… அப்படி ஒரு காலு… ஊரடங்கில் சூப்பரான வொர்க் அவுட் !

சென்னை : பிக் பாஸ் புகழ் சாக்ஷி அகர்வால் ஒரு புதுமையான உடற்பியிற்சி வீடியோவை வெளியிட்டுள்ளார்.

ஊரடங்கு காலத்தில் உடற்பயிற்சிக்கூடங்கள் மூடப்பட்டுள்ளதால் இந்த புதுமுயற்சியை தனது ரசிகர்களுக்கு பதிவிட்டுள்ளார்.

இந்த வொர்க் அவுட்டால் நிச்சயம் தொப்பை குறையும் அனைவரும் டிரைப் பண்ணுங்க என்றும் கூறியுள்ளார்.

துணைநடிகையாக

துணைநடிகையாக

ராஜா ராணி ,விஸ்வாசம், காலா போன்ற பல படங்களில் துணை நடிகையாக நடித்தவர் சாக்ஷி அகர்வால். ஆனால் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்பு தான் இவர் அனைவருக்கும் பரிச்சியம் ஆனார். இதையடுத்து இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் இவரை பின் தொடர ஆரம்பித்தனர்.

லீட் ரோல்

அதன் பிறகு சினிமாவில் பிஸியாக நடித்து வருகிறார். க்ரைம் த்ரில்லர் திரைப்படமான புரவி படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். அடுத்ததாக பஹிரா, சிண்ட்ரெல்லா, ஆயிரம் ஜென்மங்கள், ஜெயிக்கிர குதிரை போன்ற படங்களை கையில் வைத்துக்கொண்டு சுறுசுறுப்பாக நடித்து வருகிறார்.

சிக்கென்ற உடல்

என்னத்தான் பிஸியாக இருந்தாலும், கிளாமர் புகைப்படத்தை பதிவிடுவதை இவர் ஒரு வழக்கமாகவே கொண்டுள்ளார். உடலை சிக்கென வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் உடைய இவர், ஊரடங்கு நேரத்தில் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எவ்வாறு உடற்பயிற்சி செய்வது என்ற வீடியோவை பதிவிட்டுள்ளார்.

Recommended Video

Celebrities Holi celebrations | Sneha, Aishwarya Dhanush, Genelia, Shriya

சூப்பர் வொர்க் அவுட்

அதில், 4 பூந்தொட்டிகளை வைத்து அந்த பூந்தொட்டிகளுக்கு மத்தியில் அமர்ந்து கொண்டு கால்களை தூக்கித்தூக்கி உடற்பயிற்சி செய்கிறார். மேலும், இந்த உடற்பயிற்சிக்கு 4 பூந்தொட்டிகளை பயன்படுத்தலாம் என்றும், இந்த உடற்பயிற்சியின் மூலம் தொப்பை குறையும் என்றும் இது சூப்பரான வொர்க் அவுட் இதை வீட்டிலிருந்தே செய்யலாம் என்றும் அவர் அந்த வீடியோவில் பதிவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X