வயிறைக் குறைக்க ஒல்லி பெல்லி ஒர்க் அவுட்! பிரபல பிக்பாஸ் நடிகையின் தாறுமாறு தலையணை எக்சர்சைஸ்!

By

சென்னை: நடிகை சாக்‌ஷி அகர்வால் வெளியிட்டுள்ள ஒல்லி பெல்லி ஒர்க் அவுட் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Recommended Video

Top Celebrities Quarantine | Lock Down Diaries

நடிகை சாக்‌ஷி அகர்வால், இன்ஸ்டாகிராமில் அடிக்கடி போட்டோக்களை பதிவிடுவது வழக்கம்.

பிக்பாஸ் சீசன் 3 மூலம் புகழ் பெற்ற இவர், ஒர்க் அவுட் பிரியை. ஒர்க் அவுட் தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டு வருவார்.

அரண்மனை 3

அட்லி இயக்கிய ராஜா ராணி, ரஜினியின் காலா, அஜித்தின் விஸ்வாசம் உட்பட சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தவர் சாக்‌ஷி அகர்வால். ராய் லட்சுமியுடன் சின்ட்ரெல்லா, சக்தி சவுந்தரராஜன் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள டெடி, சுந்தர் சியின் அரண்மனை 3 படங்களில் இப்போது நடித்து வருகிறார்.

தலையணை ஒர்க் அவுட்

தலையணை ஒர்க் அவுட்

இப்போது அவர் ஒர்க் அவுட் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தொப்பை இல்லாத வயிறு வேண்டுமா? இந்த தலையணை ஒர்க் அவுட்டை பாலோ பண்ணுங்க என்று கேப்ஷன் கொடுத்துள்ளார். அதில் படுத்திருக்கும் நடிகை சாக்‌ஷி, தலையணையை அங்கும் இங்கும் மாற்றி சில எக்சர்சைஸ்களை செய்கிறார். தொப்பை இல்லாத வயிறுக்கு என்ன மாதிரியான எக்சர்சைஸ் செய்ய வேண்டும்? என்று அவரிடம் கேட்டுள்ளனர்.

வரவேற்கத்தக்கது

அவர்களுக்காக இந்த வீடியோவை பதிவிடுகிறேன் என்று அவர் கூறியுள்ளார் சாக்‌ஷி. இந்த எக்சர்சைஸை செய்தால் சில அதிசயங்களைப் பார்க்கலாம் என்று கூறியுள்ளார். இதற்கு ஏராளமான ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். பலர் அவரை பாராட்டியுள்ளனர். மற்றவர்களை ஒர்கவுட் செய்ய ஊக்குவிக்கும் உங்கள் செயல் வரவேற்கத் தக்கது என்று சிலர் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து பண்ணுங்க

'இதற்காகத்தான் தலைவியே உங்க மேல அன்பு செலுத்தறோம் என்று சிலர் கூறியுள்ளனர். தினமும் உங்க ஹெல்த் டிப்ஸ்சை ஃபாலோ பண்றேன், நன்றி சாக்‌ஷி என்று சிலர் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து இப்படி பண்ணுங்க என்றும் சிலர், இது முக்கியமான பயிற்சி கண்டிப்பாக வயித்தைக் குறைச்சிருவோம் என்று சிலர் தெரிவித்துள்ளனர்.

எப்பவும் பெட்ரூம்தானா?

எப்பவும் பெட்ரூம்தானா?

இதற்கு முன்னதாக அவர் பெட்ரூமில் இருந்தபடி சில புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படங்கள் வைரலானது. அதில் ஒரு ரசிகர், மீரா மிதுன் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க? என்று கேட்டுள்ளார். எப்பவுமே பெட்ரூம்லயேதான் இருப்பீங்களா என்று ஒருவர் விசாரித்துள்ளார். இன்னும் சிலர் அவர் அழகை வர்ணித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X