Sakshi Agarwal: பொதுவா ஜாக்கெட்ல ஜன்னல் தான வைப்பாங்க.. சாக்‌ஷி அகர்வால் என்ன கதவே வச்சிருக்காரு!

சென்னை: பிக் பாஸ் பிரபலமான சாக்‌ஷி அகர்வால் தமிழ் சினிமாவில் நடிகையாக தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். இன்ஸ்டாகிராமிலும் அடிக்கடி செம ஹாட்டான போட்டோக்களை பதிவிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார்.

எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான நான் கடவுள் இல்லை படத்தில் நாயகியாக நடித்த சாக்‌ஷி அகர்வால் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்துள்ளன.

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அழகு தேவதையாக காக்ரா சோலி உடையில் மாஸ் காட்டி உள்ளார் சாக்‌ஷி அகர்வால்.

பிக் பாஸ் பிரபலம்: பிக் பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்து கொண்ட சாக்‌ஷி அகர்வால் தமிழ் சினிமாவில் காலா, விஸ்வாசம், ராஜா ராணி, டெடி உள்ளிட்ட பல படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

ராய் லக்‌ஷ்மி நடித்த சிண்ட்ரெல்லா படத்தில் வில்லியாக நடித்த மிரட்டிய சாக்‌ஷி அகர்வால் நடிகர் விஜய்யின் அப்பா இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் சமுத்திரகனி நடித்த நான் கடவுள் இல்லை படத்தில் கிக் பாக்ஸிங் சாம்பியனாக மெர்சல் காட்டினார்.

சிஎஸ்கே போட்டியை கண்டு ரசித்தார்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகையான சாக்‌ஷி அகர்வால் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியை சேப்பாக்கம் ஸ்டேடியத்துக்கு சென்று பார்த்துள்ளார். சென்னை குயின்ஸ் விஷ் சூப்பர் கிங்ஸ் எனும் பதாகையையும் ஏந்திக் கொண்டு மைதானத்தில் அவர் போஸ் கொடுத்த போட்டோக்களையும் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், துர்கா ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், தமிழிசை சவுந்திரராஜன், தனுஷ், பிரியங்கா மோகன், ஷாலினி, நடிகர் அஜித்தின் குழந்தைகள் உள்ளிட்ட பலரும் நேற்றைய போட்டியை கண்டு ரசித்தனர்.

Sakshi Agarwal latest glamour blouse design grabs fans attention

ரம்ஜான் வாழ்த்து: ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஏகப்பட்ட பிரபலங்கள் புத்தாடை உடுத்தி ரமலான் வாழ்த்துக்களை சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகை சாக்‌ஷி அகர்வால் காக்ரா சோலியில் செம அழகாக மேக்கப் போட்டுக் கொண்டு எடுத்த போட்டோக்களை வெளியிட்டு ரம்ஜான் வாழ்த்து கூறியுள்ளார்.

Sakshi Agarwal latest glamour blouse design grabs fans attention

ஜன்னலுக்கு பதில் கதவே வச்சிட்டீங்களே: ரம்ஜான் வாழ்த்து சொல்ல படு கவர்ச்சியான போட்டோக்களை ஷேர் செய்துள்ள சாக்‌ஷி அகர்வாலை பார்த்து அவரது அழகில் ரசிகர்கள் பலரும் சொக்கிப் போயுள்ளனர்.

ஜாக்கெட்டில் பொதுவாக ஜன்னல் டிசைன் தானே வைப்பாங்க, நீங்க என்ன கதவே வெச்சிட்டீங்களே என நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு கலாய்த்து வருகின்றனர்.

Sakshi Agarwal latest glamour blouse design grabs fans attention

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X