கவின் இளம் சதைக்கு அலைபவர்.. ரசிகரின் டிவிட்டுக்கு சாக்ஷியின் ரியாக்ஷன்.. சர்ச்சை!

Recommended Video

நவராத்திரியை பெருசா கொண்டாடணும் | Sakshi Exclusive Interview Bigg Boss

சென்னை: கவின் இளம் சதைக்கு அலைபவர் என்ற ரசிகரின் டிவிட்டுக்கு சாக்ஷி கொடுத்த ரியாக்ஷன் சர்சையை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றவர் சாக்ஷி. இவர் மாடல் மற்றும் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி ஆவார். சாக்ஷி சில படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில் விஜய் டிவி சீரியல்களில் நடித்துள்ள கவினும் கலந்துகொண்டார். கவின் தான் போட்டியில் நீடிக்க வேண்டும் என்பதற்காக நிகழ்ச்சியில் பங்கேற்ற சக போட்டியாளர்களான ஷெரின், சாக்ஷி, அபிராமி, லாஸ்லியா ஆகிய நான்கு பேரிடமும் கடலை போட்டார்.

சாக்ஷியுடன் காதல்

சாக்ஷியுடன் காதல்

ஒரு கட்டத்தில் இந்த விவகாரம் காதலாக மாறியது. முதலில் சாக்ஷியை காதலிப்பதாக கூறி திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறிய கவின், பின்னர் தானாக வந்த லாஸ்லியாவையும் காதலிக்க தொடங்கினார்.

4 பேரை காதலித்தால்

4 பேரை காதலித்தால்

இதனால் பிக்பாஸ் வீட்டுக்குள் மோதல் ஏற்பட இந்த விவகாரம் கமல் வரை சென்றது. அப்போது 4 பேரை காதலித்தால் பிரச்சனை வராது கடைசி வரை சஸ்டையின் பண்ணலாம் என்று நினைத்ததாக கூறினார் கவின். இதனை கேட்ட கமல் இது தவறில்லையா என்று கண்டித்தார்.

லாஸ்லியாவுடன் காதல்

லாஸ்லியாவுடன் காதல்

இதனை தொடர்ந்து சாக்ஷியுடனான காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்த கவின், லாஸ்லியாவை தொடர்ந்து காதலித்து வருகிறார். இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு வெளியே போய் தங்களின் காதலை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு செல்லலாம் என்று ஏற்கனவே பேசியுள்ளனர்.

ரசிகர்கள் வாழ்த்து

ரசிகர்கள் வாழ்த்து

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து முதலில் வெளியேறினார் சாக்ஷி. அண்மையில் பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் சாக்ஷி மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்கு அழைக்கப்பட்டார். இதனை தொடர்ந்து வெளியே வந்த சாக்ஷிக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்து கூறினர்.

இளம் சதைக்கு அலைவபவர்

அப்போது, சாக்ஷியின் ரசிகர் ஒருவர், சாக்ஷி பாலச்சந்தர் படத்தின் நடிகையை போல என்றும், லாஸ்லியா ஒரு பச்சோந்தி என்றும் கவின் வக்கிரமானவன் என்றும் இளம் சதைக்கு அலைபவன் என்றும் பார்வையாளர்கள் கண்டுபிடிப்பதற்கு முன்பு மிக விரைவாக கண்டுபிடித்துவிட்டார் என்றார்.

இதயம்

இந்த டிவிட்டை பார்த்த சாக்ஷி, இதயத்தை பதிவிட்டு தனது ஆதரவை கூறியுள்ளார். கவினை கேவலமாக பேசிய தனது ரசிகரை ஆதரிக்கும் வகையில் சாக்ஷி டிவிட்டியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X