ஆயிரம் ஜென்மங்களில் ஜி.வி.பிரகாஷுடன் ஜோடி சேரும் சாக்‌ஷி அகர்வால்

சென்னை: பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை சாக்‌ஷி அகர்வால், தற்போது ஜி.வி.பிரகாஷ் உடன் ஆயிரம் ஜென்மங்கள் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படம் ஹாரர் த்ரில்லராக உருவாகி வருகிறது. இந்நிலையில், சாக்‌ஷி அகர்வால் இன்ஸ்டாகிராமில் ஆயிரம் ஜென்மங்கள் பட போட்டோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

சாக்‌ஷி அகர்வால் தமிழ், கன்னடம், மலையாள சினிமாவில் நடித்தவர். இவர் தமிழில் பல படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்தவர். இவரை பிக் பாஸுக்கு முன்பு வரை பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பிக்பாஸ் தொடரின் மூலம் பலரும் பிரபலமாகி உள்ளனர்.

Sakshi Agarwal released Aayiram Jenmangal Movie photo on Instagram

உதாரணத்திற்கு, ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பு வரை மிக சாதாரண நடிகையாகத் தான் இருந்தார். அதற்கு பிறகு அவர் பெரிய அளவில் மக்களிடம் பிரபலமானார். சமூக வலைதளங்களில் அவருக்கென ஓவியா ஆர்மி எல்லாம் துவங்கப்பட்டது.

நிலைமை இவ்வாறு இருக்கையில், பிக்பாஸில் சாக்‌ஷியும் தன்னால் முடிந்த வரை நல்ல உழைப்பை கொடுத்து இருந்தார். ஏழு வாரங்கள் வரை அவர் பிக்பாஸ் வீட்டில் இருந்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவருக்கும் கவினுக்கும் இருந்த நட்பும் காதலும் பலரால் ரசிக்கப்பட்டது. பின் அவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், அவர்கள் பிரிந்தனர். மீண்டும் சாக்‌ஷி விருந்தினராக பிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற போது கூட சாக்‌ஷியும் கவினும் பேசிக் கொள்ளவில்லை.

இதற்கு முன்பு சாக்‌ஷிக்கு கிடைத்த முக்கியமான வேடங்களில், காலா படத்தில் கிடைத்த கதாபாத்திரமும் ஒன்று. காலா படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்திருப்பார் சாக்‌ஷி. சாக்‌ஷி சில யூடியூப் வீடியோக்களிலும் கூட நடித்துள்ளார். அவர் நடிக்க வருவதற்கு முன் மாடலிங் செய்து கொண்டிருந்தார்.

தற்போது ஜி.வி.பிரகாஷ் உடன் ஜோடியாக ஆயிரம் ஜென்மங்கள் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் ஹாரர் த்ரில்லராக உருவாகி வருகிறது. தொடர்ந்து தோல்விப் படங்களில் நடித்து வந்த ஜி.வி.பிரகாஷ், தற்சமயம் சிவப்பு மஞ்சள் பச்சை படத்தில் வெற்றிக் கனியை சுவைத்தார். இருந்தாலும் தனி ஹீரோவாக அவருக்கு கடைசி ஹிட் த்ரிஷா இல்லனா நயன்தாரா படம் தான். சர்வம் தாளமயம் படம் கூட கலவையான விமர்சனங்களையே பெற்றது.

தற்போது ஆயிரம் ஜென்மங்கள் படம் இவருக்கு எவ்வாறு அமையும் என்று காத்திருந்து பார்ப்போம். தற்போது இன்ஸ்டாகிராமில் சாக்‌ஷி ஆயிரம் ஜென்மங்கள் பட போட்டோ ஒன்றை வெளியிட்டு உள்ளார் அதில் ஜி.வி.பிரகாஷ் சாக்‌ஷி மற்றும் ஈஷா ரெப்பா ஆகியோர் இருந்தனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X