பிரபல பிக்பாஸ் நடிகையிடம்.. அதற்கு அர்த்தம் கேட்கும் ரசிகர்கள்.. அழகில் பொறாமைப்படும் ரசிகைகள்!

By

சென்னை: பிரபல பிக்பாஸ் நடிகையின் அழகில் பொறாமைப்படுவதாக ரசிகைகள் சிலர் தெரிவித்துள்ளனர்.

Recommended Video

V-CONNECT | ACTRESS SAKSHI AGARWAL CHAT| இந்தியாதான் முக்கியம் TIKTOK தேவ இல்ல | FILMIBEAT TAMIL

தமிழில், ராஜா ராணி, ரஜினியின் காலா, அஜித்தின் விஸ்வாசம் உட்பட சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தவர், சாக்‌ஷி அகர்வால்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம், அதிக பிரபலமடைந்த சாக்‌ஷிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள்.

படங்கள் வெயிட்டிங்

படங்கள் வெயிட்டிங்

இப்போது, ராய் லட்சுமியுடன் சின்ட்ரெல்லா, சக்தி சவுந்தரராஜன் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள டெடி, சுந்தர். சியின் அரண்மனை 3 படங்களில் நடித்து வருகிறார். லாக்டவுன் காரணமாக இந்த படங்கள் வெயிட்டிங். இயல்பு நிலை திரும்பியதும் அரண்மனை 3 ஷூட்டிங் தொடங்க இருக்கிறது. இந்நிலையில் லாக்டவுனால், பெரும்பாலான நடிகைகள் சமூக வலைதளப் பக்கங்களில், தங்கள் நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.

சாக்‌ஷி அகர்வால்

சாக்‌ஷி அகர்வால்

அது அவர்களுக்கான பொழுதுபோக்கு ஏரியாவாக மாறி இருக்கிறது. தங்களது ஒர்க் அவுட் உள்ளிட்ட வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். தினமும் சில புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிடுவதையும் சில நடிகைகள் செய்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ஒருவராக இருக்கிறார், சாக்‌ஷி அகர்வால்.

தினமும் இரண்டு மூன்று

தினமும் இரண்டு மூன்று

உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்வதில் அதிக ஆர்வம் கொண்ட இவர், அடிக்கடி தனது ஒர்க் அவுட் புகைப்படங்கள் மற்றும் வீடியோவை, பதிவிட்டு வருகிறார். இப்படி செய்தால், உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ளலாம் என்று ரசிகர்களிடமும் சொல்வார். தினமும் இரண்டு மூன்று முறை, போட்டோ பதிவேற்றுவதை வழக்கமாக வைத்திருக்கிறார், இந்த செல்லம்!

சிறுவயது போட்டோ

சிறுவயது போட்டோ

அந்த புகைப்படங்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள், லைக்ஸ்களை அள்ளிக் குவிப்பதும் வழக்கம். கடந்த சில நாட்களுக்கு முன் தனது சிறுவயது புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டிருந்தார். அதில் தனது பிளாஷ்பேக்கை குறிப்பிட்டிருந்தார் சாக்‌ஷி அகர்வால். அந்தப் போட்டோஸ் வைரலானது. இந்நிலையில் இப்போதும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

கொஞ்சம் பொறாமைதான்

கொஞ்சம் பொறாமைதான்

''உங்களைச் சுற்றி எவ்வளவு கடினமான விஷயங்கள் வந்தாலும் உங்கள் புன்னகையை மட்டும் ஒருபோதும் விட்டுவிடாதீர்கள். எனக்கு நிச்சயம் தெரியும், நாம் மீண்டும் வருவோம் என்று' என கேப்ஷன் கொடுத்திருக்கிறார். சில ரசிகைகள், எப்படி இவ்வளவு அழகா இருக்கீங்க. உங்களைப் பார்த்தா கொஞ்சம் பொறாமைதான் என்று கூறியுள்ளனர். இன்னொருவர் உங்கள் புன்னகை எனர்ஜி தருகிறது என்று தெரிவித்துள்ளார்.

டாட்டூக்கு அர்த்தம்?

டாட்டூக்கு அர்த்தம்?

நடிகை சாக்‌ஷி, தனது தொடையில் டாட்டூ குத்தியிருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ள ஒரு ரசிகர் , அந்த டாட்டூக்கு என்ன அர்த்தம்? என்று கேட்டுள்ளார். மற்றொரு நெட்டிசன், அதுல என்னதான் எழுதி இருக்குன்னு சொல்லுங்களேன்?' என்று கேட்டுள்ளார். ஒருவர், இனி இப்படி கிளாமரா போட்டோ போடாதீங்க, குழந்தைகள் கூட உங்க போட்டோவை பார்க்கிறாங்க என்று அட்வைஸ் செய்திருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X