'சலிக்காம போட்டோ போஸ்ட் பண்றதுல நீங்க வேற லெவல்..' பிரபல நடிகையை கலாய்க்கும் ஃபேன்ஸ்!

By

சென்னை: பிரபல நடிகையின் புதிய போட்டோஷூட் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகைகளில் ஒருவர், நடிகை சாக்‌ஷி அகர்வால்.

சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், அதற்கு முன் சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்திருந்தார்.

காத்திருக்கிறார்

காத்திருக்கிறார்

அட்லி இயக்கிய ராஜா ராணி, ரஜினியின் காலா, அஜித்தின் விஸ்வாசம் உட்பட சில படங்களில் நடித்துள்ளார். ராய் லட்சுமியுடன் சின்ட்ரெல்லா, சக்தி சவுந்தரராஜன் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள டெடி உட்பட சில படங்களில் நடித்துள்ள சாக்‌ஷி, இதன் ரிலீஸை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்.

சண்டைப் பயிற்சி

சண்டைப் பயிற்சி

இந்தப் படங்களை அடுத்து ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் படம் ஒன்றிலும் நடித்து வருகிறார். இதை ஜி.ஜே.சத்யா இயக்குகிறார். இந்தப் படத்துக்காக, சாக்‌ஷி, சிறப்பு சண்டைப் பயிற்சிகளை மேற்கொள்கிறார். சுந்தர்.சியின் அரண்மனை 3 படத்திலும்
சாக்‌ஷிக்கு முக்கிய வேடம். இதன் ஷூட்டிங் முடிந்துவிட்டது.

120 ஹவர்ஸ்

120 ஹவர்ஸ்

இதற்கிடையே என்.டி.நந்தா இயக்கிய 120 ஹவர்ஸ் என்ற படத்தில் நடித்துள்ளார், சாக்‌ஷி அகர்வால். இதில் பிரணய் காளியப்பன் உட்பட பலர் நடித்துள்ளனர். இதன் டிரைலரை இயக்குனர் பாரதிராஜா சில மாதங்களுக்கு முன் வெளியிட்டார். நந்தா, இதற்கு முன் வல்லதேசம், ஒரு கணம் படங்களை இயக்கியவர்.

ஒர்க் அவுட்

ஒர்க் அவுட்

இந்தப்படம் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமாகிறாராம் சாக்‌ஷி. இவர், அடிக்கடி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தனது ஒர்க் அவுட் புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். அதை எப்படி செய்வது என்று விளக்கமும் அளிப்பார். இந்நிலையில் சமீபகாலமாக போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

கிளாமர் போஸ்

கிளாமர் போஸ்

இப்போது பதிவு செய்துள்ள போட்டோவில் மல்லாக்கப்படுத்தபடி கிளாமராக போஸ் கொடுத்திருக்கிறார், சாக்‌ஷி. இதற்கு கேப்ஷனாக, இந்த உலகத்தில் நீங்கள்தான் பேரழகி என்ற எண்ணத்துடன் எழுந்திருங்கள். அந்த அதிர்வின் காரணமாக, என்ன மாயம் நடக்கிறது என்பதைப் பாருங்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

சலிக்காம போட்டோ

சலிக்காம போட்டோ

இதற்கு ரசிகர்கள் பலர் கண்டபடி கமெட்ன்களை அள்ளித் தெளித்துள்ளனர். ஒருவர், என்னமோ சொல்ல வர்றீங்க, என்னன்னுதான் தெரியலை என்றும், இன்னொருவர், சலிக்காம போட்டோ போஸ்ட் பண்றதுல நீங்க செம என்றும் கூறியுள்ளனர்.

நிறைய ஸ்டில்ஸ்

நிறைய ஸ்டில்ஸ்

சில நெட்டிசன்ஸ் கிளாமர் வேண்டாம் என்றும் கூறியுள்ளனர். ஸ்டன்னிங் லுக், நீங்க கலக்குங்க சாக்‌ஷி, இதே போல இன்னும் நிறைய ஸ்டில்ஸ் போஸ்ட் பண்ணுங்க என்றும் பலர் கூறியுள்ளனர். சில நெட்டிசன்ஸ், அவர் அழகை வர்ணித்து கருத்து தெரிவித்துள்ளனர். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X