யார் தேவதை, யார் பிசாசு? யாருக்கோ சொல்றாங்க போல..கருப்பு நிற டிரெஸில் பிக்பாஸ் நடிகையின் செம போஸ்!
சென்னை: பிரபல பிக்பாஸ் நடிகை வெளியிட்டுள்ள ஹாட் போட்டோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Recommended Video
தமிழில், ராஜா ராணி, ரஜினியின் காலா, அஜித்தின் விஸ்வாசம் உட்பட சில படங்களில் நடித்தவர், சாக்ஷி அகர்வால்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் அதிக பிரபலமடைந்தார். இவருக்கு சமூக வலைதளங்களில் ஏகப்பட்ட ரசிகர்கள்.

படப்பிடிப்புகள்
இப்போது, ராய் லட்சுமியுடன் சின்ட்ரெல்லா, சக்தி சவுந்தரராஜன் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள டெடி, சுந்தர் சியின் அரண்மனை 3 படங்களில் நடித்து வருகிறார். லாக்டவுன் காரணமாக இந்த படங்களின் படப்பிடிப்புகள் தடைபட்டுள்ளன. லாக்டவுனால் பெரும்பாலான நடிகைகள் சமூக வலைதள பக்கங்களில் தங்கள் நேரத்தை செலவிடுவதை வழக்கமாக்கி இருக்கின்றனர்.

த்ரோபேக் போட்டோ
தங்களது ஒர்க் அவுட், டான்ஸ் மற்றும் போட்டோஷூட் புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். சிலர் தங்கள் பழைய த்ரோபேக் புகைப்படங்களையும் பதிவிடுகின்றனர். தினமும் இரண்டு, மூன்று புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிடுவதையும் சில நடிகைகள் செய்து வருகின்றனர்.

சாக்ஷி அகர்வால்
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ஒருவராக இருக்கிறார், சாக்ஷி அகர்வால். உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்வதில் அதிக ஆர்வம் கொண்ட சாக்ஷி, அடிக்கடி தனது ஒர்க் அவுட் வீடியோவை, இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களுக்கு ஊக்கம் அளிப்பார். அவரது டயட் விஷயங்களையும் ரசிகர்களுக்கு சொல்வார். இதனால் இவரை ஏராளமான ரசிகர்கள் பின் தொடர்கின்றனர்.

கிளாமர் ஸ்டில்கள்
தினமும் இரண்டு மூன்று முறை, போட்டோ பதிவேற்றுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் சாக்ஷி. அதற்கு ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக் குவிப்பது வழக்கம். இப்போது கருப்பு நிற உடையில் கிளாமர் ஸ்டில்களை வெளியிட்டுள்ளார் சாக்ஷி. ட்விட்டரில் வெளியிட்டுள்ள இந்த போட்டோவுக்கு கேப்ஷனாக, எப்போதும் திட்டங்கள் தேவையில்லை. சில நேரங்களில் சுவாசிக்கவும் வேண்டும். நம்புங்கள். அடுத்து என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம் என்று கூறியுள்ளார்.

யார் தேவதை?
இதே போட்டோவை இன்ஸ்டாவிலும் ஷேர் செய்துள்ள சாக்ஷி, அங்கு வேறொரு கேப்ஷன் கொடுத்துள்ளார். அதில் தேவதைகளுக்கு இறகுகள் தேவையில்லை. யார் தேவதை, யார் பிசாசு என்பதை காலம் மட்டுமே நிரூபித்துள்ளது என்று கூறியுள்ளார் சாக்ஷி. இது வேறொரு பிக்பாஸ் நடிகையை குத்துவது போல இருக்கிறதே என்று சிலர் கேட்டுள்ளனர். இந்த போட்டோவுக்கும் வழக்கம் போல ஏகப்பட்ட லைக்ஸ், கமென்ட்ஸ் என குவிந்திருக்கிறது.

மெழுகு பொம்மை
ஒருவர், பளபளன்னு மெழுகு பொம்மை மாதிரி இருக்கீங்க சாக்ஷி என்று கூறியுள்ளார். உங்களிடம் உள்ள அழகான புகைப்படங்களில் இதுவும் ஒன்று சிலர் கூறியுள்ளனர். சர்வதேச மாடல் மாதிரி இருக்கறீங்க என்று சிலரும், நீங்க தங்கம் போல மின்னுறீங்க என்றும் சிலரும் கூறியுள்ளனர். இன்னொருவர், நான் ஒன்னும் சும்மா சொல்லலை, நீங்க நிஜமாவே மெழுகு பொம்மை மாதிரிதான் இருக்கீங்க என்று கூறியுள்ளார்.

சரிபட்டு வரலை
ஒரு நெட்டிசன், என்ன சிம்ரன் இதெல்லாம்? இந்த டிரெஸ்சுக்கு என்ன பேரு என்று கேட்டுள்ளார். வேற லெவல் அழகா இருக்கீங்க என்று சிலரும், கருப்பு கலர்ல டிரெஸ் போடாதீங்க என்றும் சில ரசிகர்களும் கூறியுள்ளனர். இன்னொருவர் இந்த டிரெஸ் உங்களுக்கு சரிபட்டு வரலை என்று தெரிவித்துள்ளார். இந்த போட்டோ வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











