யாரும் சான்ஸ் தரலைன்னா என்ன.. சாக்ஷி போட்ட நமக்கு நாமே திட்டம்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகும் சாக்ஷி அகர்வாலுக்கு சொல்லிக் கொள்ளும் அளவுக்கு படங்கள் அமையவில்லை.
அப்படியே அமைந்தாலும், வில்லி வேடம், தோழி வேடம் என மீண்டும் சைட் ரோல்கள் தான் வருகிறது.
இதுபோன்ற ரோல்களில் நடிக்க சாக்ஷி அகர்வாலுக்கு விருப்பம் இல்லை. அதனால், ஹீரோயின் சென்ட்ரிக் படத்தில் நாயகியாக நடிக்க முடிவு செய்துள்ளார் சாக்ஷி.
ஹாட் புகைப்படங்கள்
இளைஞர்கள் மத்தியில் தனது பெயரும் நிலைக்க வேண்டும் என தொடர்ந்து தனது சமூக வலைதள பக்கங்களில் படு கவர்ச்சியான புகைப்படங்களை நடிகை சாக்ஷி பதிவிட்டு வந்தார். ஆனால், அவர் நினைத்த அளவிற்கு அந்த புகைப்படங்கள் அவருக்கு சினிமா வாய்ப்புகளை தேடி தரவில்லை.
கேலண்டர் போட்டோஷூட்
என்ன செய்தால் வைரல் ஆகலாம் என சிந்தித்த சாக்ஷி அகர்வால், யானை வைத்து ஒரு கேலண்டர் போட்டோஷூட் நடத்தினார். புதுவிதமாக இருந்த அந்த போட்டோஷூட் புகைப்படங்கள் இளைஞர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் இடையே சாக்ஷியை கொண்டு சேர்த்தது.
ஹீரோயின் சென்ட்ரிக்
முன்னணி ஹீரோக்கள் மற்றும் இளம் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடிக்காமல், சாக்ஷி அகர்வால் லேடி சூப்பர்ஸ்டாரை போல ஹீரோயின் சென்ட்ரிக் ரூட் மூலம் நாயகியாக தனது ரூட்டை தொடங்கவுள்ளார்.
பொலிட்டிக்கல் த்ரில்லர்
அதுவும் முதல் படத்திலேயே ஆக்ஷன் அவதாரம் எடுக்க சாக்ஷி முடிவு செய்துள்ளார். அரசியல் த்ரில்லர் கதையாக உருவாகவுள்ள சாக்ஷியின் புதிய படத்தை மாளிகை, பகவான் படங்களை இயக்கிய இயக்குநர் சத்யா இயக்குகிறார். இந்த படத்தில் ஜார்னலிஸ்ட் கதாபாத்திரத்தில் சாக்ஷி நடிக்கவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.அதுவும் முதல் படத்திலேயே ஆக்ஷன் அவதாரம் எடுக்க சாக்ஷி முடிவு செய்துள்ளார். அரசியல் த்ரில்லர் கதையாக உருவாகவுள்ள சாக்ஷியின் புதிய படத்தை மாளிகை, பகவான் படங்களை இயக்கிய இயக்குநர் சத்யா இயக்குகிறார். இந்த படத்தில் ஜார்னலிஸ்ட் கதாபாத்திரத்தில் சாக்ஷி நடிக்கவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.


Click it and Unblock the Notifications











