twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    டிக்டாக் உள்ளிட்ட சீன செயலிகளுக்கு அதிரடி தடை.. பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த பிரபல நடிகை!

    |

    சென்னை: டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அதிரடியாக தடைவிதித்ததற்கு பிக்பாஸ் பிரபலம் சாக்‌ஷி அகர்வால் நன்றி தெரிவித்துள்ளார்.

    Recommended Video

    நாடு தான் முக்கியம்... TikTok-ல் இருந்து வெளியேறிய பிக்பாஸ் நடிகை

    ராஜா ராணி, ரஜினியின் காலா, ராய் லக்‌ஷ்மியின் இன்னும் ரிலீஸ் ஆகாத சிண்ட்ரெல்லா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள சாக்‌ஷி அகர்வால், பிரதமரின் இந்த அதிரடி முடிவை பாராட்டி உள்ளார்.

    டிக்டாக் செயலி போய்விட்டதே என புலம்பும் பல பிரபலங்கள் மத்தியில், சாக்‌ஷி அகர்வால் பாராட்டி, நன்றி தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    பிரபல இளம் டிக்டாக் ஸ்டார் திடீர் தற்கொலை.. 16 வயதில் இப்படியொரு முடிவா..? ரசிகர்கள் அதிர்ச்சி! பிரபல இளம் டிக்டாக் ஸ்டார் திடீர் தற்கொலை.. 16 வயதில் இப்படியொரு முடிவா..? ரசிகர்கள் அதிர்ச்சி!

    பிக்பாஸ் பிரபலம்

    பிக்பாஸ் பிரபலம்

    உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானவர் நடிகை சாக்‌ஷி அகர்வால். அதனை தொடர்ந்து, சமூக வலைதளங்களில் வித விதமான போட்டோஷூட்களை நடத்தி, அந்த புகைப்படங்களை பதிவிட்டு பிரபலமாகி வருகிறார்.

    வொர்க்கவுட்

    வொர்க்கவுட்

    மேலும், வெறித்தனமான வொர்க்கவுட் ஃப்ரீக்கான நடிகை சாக்‌ஷி அகர்வால், இந்த லாக்டவுனில் தான் செய்யும் வொர்க்கவுட் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு, தனது ரசிகர்களுக்கு ரொம்பவே இன்ஸ்பிரேஷனாக இருந்து வருகிறார். அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களையும் பதிவிட்டு, ரசிகர்களை ஈர்ப்பதிலும் கவனத்தை செலுத்தி வருகிறார்.

    டிக்டாக் வேண்டாம்

    டிக்டாக் வேண்டாம்

    இந்தியா - சீனா இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், பல பிரபலங்கள், சீன செயலியான டிக்டாக் உள்ளிட்ட ஆப்களை புறக்கணிக்க வேண்டும், தடை செய்ய வேண்டும் என்ற கோஷங்களை எழுப்பி வந்தனர். தற்போது டிக்டாக் செயலி இந்திய அரசால் தடை செய்யப்பட்டு இருக்கும் நிலையில், முன்கூட்டியே, டிக்டாக்கை தான் இனி பயன்படுத்த போவதில்லை என்ற முடிவுக்கு வந்த சாக்‌ஷி, டிக்டாக் ஆப்பில் இருந்து வெளியேறினார்.

    வரவேற்கிறேன்

    வரவேற்கிறேன்

    இந்நிலையில், தற்போது டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளை இந்திய அரசு அதிரடியாக தடை செய்துள்ள நிலையில், அதனை தான் வரவேற்பதாகவும், இந்த நேரத்தில் இப்படியொரு அடுத்த கட்ட நடவடிக்கையை இந்திய அரசு எடுத்தது தேவையான ஒன்று என்றும், பிரதமர் மோடிக்கு தனது பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் என ட்வீட் போட்டுள்ளார்.

    English summary
    Biggboss fame actress Sakshi Agarwal says thanks to PM Modi to ban the Chinese apps including TikTok due to India Chinese face off.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X