உன்ன கண்ணு வச்சுட்டேன்.. சுத்தி போட்டுக்கோ.. யாருக்கு இந்த கமென்ட்ஸ்னு பாருங்க!

சென்னை: சாக்ஷி அகர்வால் பாவடை தாவணியில் ஷேர் செய்திருக்கும் போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் சாக்ஷி அகர்வால். நிகழ்ச்சி தொப்பாளினியான சாக்ஷி சில படங்களில் நடித்திருக்கிறார்.

ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகுதான் சாக்ஷி பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அவர் மீது நெகட்டிவான கருத்துக்கள்தான் அதிகம் பகிரப்பட்டது.

பட வாய்ப்புகள்

பட வாய்ப்புகள்

பல பிரச்சனைகளுக்கு காரணமாக இருந்ததாலும் பின்னாடி பேசியதாலும் அவரை பாய்சன், ஸ்நேக்ஷி என மக்கள் பட்ட பெயர் வைத்து அழைத்தனர். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் சாக்ஷி அகர்வாலுக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

போட்டோக்கள்

போட்டோக்கள்

டெடி, சின்ட்ரெல்லா என தொடர்ந்து படங்களில் கமிட்டாகியிருக்கிறார் சாக்ஷி அகர்வால். சாக்ஷி அகர்வால் தொடர்ந்து சமூக வலைதளங்களில் தனது போட்டோக்களை பதிவிட்டு வருகிறார்.

இது என்ன டிரெஸ்

இது என்ன டிரெஸ்

கடந்த வாரம் படு கவர்ச்சியான உடையை அணிந்து போட்டோ ஷூட் நடத்தினார் சாக்ஷி அகர்வால். அந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் இது என்ன டிரெஸ் என கேட்டு கழுவி ஊற்றினர்.

பாவாடை தாவணி

பாவாடை தாவணி

இந்நிலையில் சாக்ஷி அகர்வால் தனது சமூக வலைதள பக்கத்தில் மீண்டும் தனது போட்டோக்களை பகிர்ந்திருக்கிறார். அதில் பச்சை நிற தாவணி, ஆஷ் நிற பாவாடை, மெரூன் நிற ஜாக்கெட் என அசத்தலாக உள்ளார் சாக்ஷி அகர்வால்.

லவ் மறைவதே இல்லை

இடுப்பு தெரிய செக்ஸியாகவும் போஸ் கொடுத்திருக்கிறார். மேலும் பாவடை தாவணியின் மீது உள்ள லவ் மட்டும் மறைவதே இல்லை என்று கேப்ஷன் கொடுத்துள்ளார்.

கண்ணு வச்சுட்டேன்

சாக்ஷியின் இந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் தாவணியில் செம அழகாய் இருக்கிறீர்கள், உன்னை கண்ணு வச்சுட்டேன் சுத்தி போட்டுக்கோ என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X