அவ்வா.. அவ்வா.. பாட்டுப்பாடி கிண்டல் செய்த சதீஷ்.. அடித்து நொறுக்கிய சாக்ஷி.. தீயாய் பரவும் வீடியோ!
Recommended Video
சென்னை: தன்னை அவ்வா.. அவ்வா.. என பாட்டுப்பாடி கிண்டல் செய்த நடிகர் சதீஷை சாக்ஷி அகர்வால் அடித்து நொறுக்கியிருக்கிறார்.
டிவி தொகுப்பாளினியான சாக்ஷி அகர்வால் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இதில் யாராவது பேசும் எதையாவது அரைகுறையாக கேட்டு சண்டை மூட்டிவிட்டார்.
சில விஷயங்களை தானே செய்துவிட்டு மற்றவர்கள் மீது பழிபோட்டார். இதனால் குறும்படம் போட்டு அவர் சாயத்தை வெளுத்தார் கமல்.

குறை கூறிய சாக்ஷி
கவினுக்கும் சாக்ஷிக்கும் இடையே பிரச்சனை வர, கவினும் சாண்டியும் பாடிய மனசு துடிக்குது அவ்வா.. அவ்வா.. மனசு வலிக்குது அவ்வா அவ்வா என்று பாடினர். இதனை பார்த்த சாக்ஷி தனது தோஷியான ஷெரினிடம் அந்த பாடலை பாடி தன்னை கிண்டல் செய்வதாக குறை கூறினார்.

பட்டப்பெயர்
அன்று முதல் சாக்ஷி என்ன செய்தாலும் அந்தப் பாடலை பாடியே அவரை வெறுப்பேற்றி வருகின்றனர் நெட்டிசன்கள். அதுமட்டுமின்றி சினேக்ஷி, பாய்சன், விஷம் என்று பட்டப்பெயர் வைத்தும் திட்டி வருகின்றனர்.

டெடி படப்பிடிப்பு
இந்நிலையில் டெடி படத்தில் சாக்ஷி அகர்வால் கமிட்டாகி இருக்கிறார். இதில் ஆர்யா, சாயீஷா மற்றும் சதீஷ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இதற்கான படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

கிண்டல் செய்த சதீஷ்
இந்நிலையில் ஷுட்டிங் ஸ்பாட்டில் தனியாக நின்றபடி மொபைலை பார்த்து கொண்டிருக்கும் நடிகர் சதீஷ், சாக்ஷியை பார்த்ததும் அவ்வா.. அவ்வா.. என பாட்டுப்பாடி கிண்டல் செய்கிறார்.
வெளுத்த சாக்ஷி
இதனை கேட்ட சாக்ஷி, சதீஷை எகிறி குதித்து வெளுக்கிறார். எல்லாம் விளையாட்டுதான்.. இந்த வீடியோவை ஷுட்டிங் ஸ்பாட் ஃபன் என தனது சமூக வலைதளபக்கத்தில் வெளியிட்டிருருக்கிறார் சதீஷ்.
பீட்டாவில் புகார்
இதனை பார்த்த நெட்டிசன் ஒருவர், ஸ்னேக் பாபு மொமென்ட் என்றும் பாம்பை துன்புறுத்தவதால் பீட்டாவிடம் புகார் அளிக்கப்போவதாகவும கூறி கிண்டல் செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











