திடீரென 'பிராமிஸ் ரிங்'.. ஷாக் கொடுத்த காதலர்.. திக்குமுக்காடி போன பிரபல ஹீரோயின்.. ஓவர் ஹேப்பி!

By

மும்பை: தனது காதலர் திடீரென 'பிராமிஸ் ரிங்' அணிவித்ததை அடுத்து, பிரபல ஹீரோயின் திக்கு முக்காடி போயிருக்கிறார்.

இது காதல் காலம் போலிருக்கிறது. இந்த கொரோனா காலகட்டத்தில் சினிமாவில் பல திருமணங்கள் நடந்து வருகின்றன.

சமீபத்தில், நடிகர் ராணா, நடிகை காஜல் அகர்வால் உள்பட சில பிரபலங்களின் திருமணங்கள் நடந்துள்ளன.

நிச்சயதார்த்த மோதிரம்

நிச்சயதார்த்த மோதிரம்

அடுத்த மாதம், சில நடிகைகளின் திருமணம் நடக்க இருக்கிறது. இந்நிலையில், பிரபல நடிகையின் காதலர் அவருக்கு நிச்சயதார்த்த மோதிரத்தை அணிவித்துள்ளார். இதை அந்த நடிகை தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். பிரபல இந்தி நடிகை சாக்‌ஷி மாலிக்.

போம் டிக்கி டிக்கி

போம் டிக்கி டிக்கி

சில இந்திப் படங்களில் நடித்துள்ள இவர், பிரபல மாடல். பல்வேறு விளம்பரங்களில் நடித்துள்ளார். டெல்லியை சேர்ந்த சாக்‌ஷி மாலிக், இப்போது சினிமாவுக்காக மும்பையில் வசித்து வருகிறார். இந்தியில் வெளியான, சோனு கே டிட்டு கி ஸ்வீட்டி என்ற படத்தில், போம் டிக்கி டிக்கி என்ற பாடல் காட்சியில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் இவர்.

அவ்வளவு எதிர்பார்ப்பு

அவ்வளவு எதிர்பார்ப்பு

அந்த ஒரு பாடல் காட்சி, அவருக்கு பெரும் புகழைப் பெற்று தந்துள்ளது. இந்தப் பாடல் வெளியான மறுநாளே, அவரது இன்ஸ்டாவில் பாலோயர்களின் எண்ணிக்கை மில்லியன் கணக்கில் அதிகரித்தது. இவர், இன்ஸ்டாவில் வெளியிடும் புகைப்படங்களுக்கு அவ்வளவு எதிர்பார்ப்பு.

காதலர் சந்துல்

காதலர் சந்துல்

லட்சக்கணக்கான ரசிகர்கள், லைக்ஸ்களை குவிக்கின்றனர். பல ரசிகர்கள் ஜாலியான கமென்ட்களையும் பதிவிடுகின்றனர். நடிகை சாக்‌ஷி, சந்துல் கடாரா என்பவரை காதலித்து வருகிறார். இருவரும் சில மாதங்களுக்கு முன் துபாய் சென்றனர். அங்கிருந்து தினமும் புகைப்படங்களாக பதிவேற்றி வந்தார், சாக்‌ஷி.

பிணைப்பை விவரிக்க

பிணைப்பை விவரிக்க

ஒரு நீச்சல் குள போட்டோவில் காதலருடன் நெருக்கமாக இருந்த புகைப்படம்

வைரலானது. அந்தப் பதிவில், நமக்கான பிணைப்பை விவரிக்க வார்த்தைகள் போதாது, எனக்கு எல்லாமே நீதான் என்று கூறி இருந்தார், சாக்‌ஷி. இதையடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

பிராமிஸ் ரிங்

பிராமிஸ் ரிங்

இந்நிலையில், நடிகை சாக்‌ஷி மாலிக்கின் காதலர் சந்துல், தங்கள் உறவை அடுத்தக் கட்டத்துக் கொண்டு செல்வதற்காக, 'பிராமிஸ் ரிங்'கை அவருக்கு அணிவித்துள்ளார். 'அவர் ஒருநாள் பிராமிஸ் ரிங் அணிவிக்கிறேன் என்றார். சரி என்றேன். சமீபத்தில் இப்படியொரு அதிர்ச்சி கொடுப்பார் என்று எதிர்பார்க்கவில்லை எனக் கூறியுள்ளார் சாக்‌ஷி மாலிக்.

மேலும் கவர்ந்திருக்கிறார்

மேலும் கவர்ந்திருக்கிறார்

இதுபற்றி அவர் கூறும்போது, 'ஒரு படப்பிடிப்புக்காக சிம்லா சென்றபோதுதான் சந்துலை சந்தித்தேன். அவர்தான், அதன் தயாரிப்பாளர். முதலில் நட்பாக பழகினோம். பிறகு காதலிக்கத் தொடங்கினோம். அவர் என்னை நன்றாகக் கவனிக்கிறார். இந்த பிராமிஸ் ரிங் மூலம் என்னை மேலும் கவர்ந்திருக்கிறார் என்று தெரிவித்துள்ளார் சாக்‌ஷி மாலிக்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X