காதலருடன் பிரபல நடிகை மாலத்தீவில் ரொமான்ஸ்.. தெறிக்கும் இன்ஸ்டா.. வைரலாகும் போட்டோஸ்!
சென்னை: பிரபல நடிகை மாலத்தீவில் காதலருடன் ரொமான்ஸ் மூடில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
எக்கச்சக்க மகிழ்ச்சியில் இருக்கிறார், சாக்ஷி. சமீபத்தில் அவர் காதலர் அணிவித்த பிராமிஸ் ரிங்தான் இந்த மகிழ்ச்சிக்கு காரணம்.
அதை கடந்த சில நாட்களுக்கு முன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார், சாக்ஷி.

போம் டிக்கி டிக்கி
சில இந்திப் படங்களில் நடித்துள்ள இந்த சாக்ஷி மாலிக், பிரபல மாடல். டெல்லியை சேர்ந்த இவர் பல விளம்பரங்களில் நடித்துள்ளார். இந்தியில் வெளியான, சோனு கே டிட்டு கி ஸ்வீட்டி என்ற படத்தில், போம் டிக்கி டிக்கி என்ற பாடல் காட்சியில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் இவர்.

காதலித்து வருகிறார்
இந்தப் பாடலுக்குப் பிறகு, சோசியல் மீடியாவில் அவருடைய ஃபாலோயர்கள் கண்டபடி அதிகரித்தனர். இவர், சந்துல் கடாரா என்பவரை காதலித்து வருகிறார். இருவரும் சில மாதங்களுக்கு முன் துபாய் சென்றனர். அங்கிருந்து தினமும் புகைப்படங்களாக பதிவேற்றி வந்தார், சாக்ஷி.

அதிர்ச்சி கொடுப்பார்
இந்நிலையில், காதலர் சந்துல், தங்கள் உறவை அடுத்தக் கட்டத்துக் கொண்டு செல்வதற்காக, 'பிராமிஸ் ரிங்'கை சமீபத்தில் அவருக்கு அணிவித்தார். 'ஒருநாள் பிராமிஸ் ரிங் அணிவிக்கிறேன் என்றார். சரி என்றேன். இப்படி அதிர்ச்சி கொடுப்பார் என்று எதிர்பார்க்கவில்லை எனக் கூறியிருந்தார் சாக்ஷி மாலிக்.

காஜல் ஹனிமூன்
இப்போது காதலருடன் மாலத்தீவு சென்றிருக்கிறார். மாலத்தீவை தங்களின் ஹாலிடே ஸ்பாட் ஆக்கி இருக்கிறார்கள் நம் ஹீரோயின்கள். அங்கு ஏற்கனவே காஜல் அகர்வால் ஹனிமூனுக்கு அங்கு சென்றார். பிறகு வேதிகா, பிரணிதா, ரகுல் பிரீத் என பலர் அங்கு சென்ற நிலையில் சாக்ஷியும் அங்கு சென்றிருக்கிறார்.

ரொமான்ஸ் போட்டோ
அங்கிருந்து சில பிகினி புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. காதலருடன் இருக்கும் ரொமான்ஸ் போட்டோவுக்கு, எனக்குப் பிடித்த ஸ்பாட்டில் எனக்குப் பிடித்தவருடன் என்று கேப்ஷன் கொடுத்துள்ளார்.

கேட்க முடியாது
மற்றொரு போட்டோவில் கடலில் கட்டப்பட்டுள்ள ஊஞ்சலில் ஆடியபடி வெளியிட்டுள்ள போட்டோவுக்கு, இதுக்கு மேல சிறந்த வியூ கேட்க முடியாது என்று கூறியுள்ளார். இன்னொரு போட்டோவில் மிதக்கும் பிரேக்பாஸ்ட் என்ற கேப்ஷன் கொடுத்து போட்டோவை பதிவிட்டுள்ளார்.
Recommended Video

கேலி ஜாலியாக
இதை லட்சணக்கானவர்கள் லைக் செய்துள்ளனர். பலர் ஜாலி கேலி கமென்ட்களை, கேலி ஜாலியாக கூறியுள்ளனர். உங்கள் பிகினி புகைப்படங்கள் ஒவ்வொன்றும் எழுந்து நின்று கைதட்ட வைக்கின்றன என சில நெட்டிசன்ஸ் ஓவராக பாராட்டியிருக்கிறனர். இந்த புகைப்படங்கள் வைரலாகின்றன.


Click it and Unblock the Notifications











