சிலரை நான் சந்திக்காமல் இருந்திருந்தால்.. ஒத்த டிவிட்டை போட்டு கவினை வெறுப்பேத்திய பிக்பாஸ் பிரபலம்!

Recommended Video

Social media trolls sakshi agarwal | சாக்ஷி போட்டோவை பார்த்து கடுப்பான நெட்டிசன்கள்!

சென்னை: பிக்பாஸ் பிரபலமான சாக்ஷி அகர்வால் சக போட்டியாளரான கவினை சீண்டி டிவிட்டியிருக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் விஜய் டிவி பிரபலமான கவின் கலந்துகொண்டார். விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தார் கவின்.

நட்புன்னா என்னன்னு தெரியுமா என்ற படத்திலும் நடித்துள்ளார் கவின். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற கவின், சக போட்டியாளரான சாக்ஷியை காதலித்தார்.

கழட்டிவிட்ட கவின்

கவினும் சாக்ஷியும் ஒருவரையொருவர் காதலித்த நிலையில் லாஸ்லியாவும் கவினை காதலித்தார். இதனை அறிந்த கவின், சாக்ஷியை கழட்டிவிட்டுவிட்டு லாஸ்லியாவை காதலித்தார்.

கவின் மீது கோபம்

கவின் மீது கோபம்

இதுதொடர்பான பிரச்சனை நிகழ்ச்சி தொகுப்பாளரான கமலிடம் சென்றபோது கன்டென்டுக்காக 4 பேரை காதலித்ததாக கூறினார் கவின். இதனால் மக்களின் கோபத்திற்கு ஆளானார் கவின்.

சாக்ஷி வீடியோ

சாக்ஷி வீடியோ

பிக்பாஸ் வீட்டிலேயே கவினுக்கும் சாக்ஷிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. சாக்ஷி பிக்பாஸிலிருந்து வெளியேறிய பின்னர் கவினை விளாசி வீடியோ வெளியிட்டிருந்தார்.

கவின் ரசிகர்கள்

கவின் ரசிகர்கள்

ஆடையை மாற்றுவது போல் கவின் பெண்களையும் மாற்றுவதாக சாடியிருந்தார். இதனால் கவின் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளானார் சாக்ஷி.

சந்திக்க முடியாமல்

இந்நிலையில் சாக்ஷி, மறைமுகமாக கவினை தாக்கி டிவிட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் எனது கடந்த காலங்களில் சிலரை நான் சந்திக்க முடியாமல் இருந்திருந்தால் என் எதிர்காலத்தில் நான் சந்திக்க கூடாததை அவர்கள் எனக்கு கற்று கொடுத்திருக்க மாட்டார்கள் என பதிவிட்டுள்ளார்.

மறந்துவிடுங்கள்

மறந்துவிடுங்கள்

சாக்ஷியின் இந்த டிவிட்டை பார்த்த நெட்டிசன்கள் நீங்கள் கவினைதான் சொல்கிறீர்கள் என்பது நன்றாகவே புரிகிறது. கசப்பான அனுபவங்களை மறந்துவிடுங்கள் என தெரிவித்துள்ளனர்.

மோசமான நினைவுகள்

நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று எனக்கு நன்றாகவே புரிகிறது. சிலர் நம் வாழ்க்கையில் ஒரு நினைவகமாகவும் சிலர் பாடங்களாகவும் வருவார்கள். மோசமான நினைவுகளை நீங்கள் மீண்டும் நினைவில் வைத்துக்கொள்ளாதீர்கள்.. என தெரிவித்துள்ளார்.

ஆச்சரியமா இருக்கு

நீங்கள் இங்கே கவினைதான் சொல்கிறீர்கள் என்று எனக்கு நன்றாகத் தெரியும். டிவியில் அவரது முகத்தைப் பார்ப்பதையே என்னால் தாங்க முடியவில்லை, வீட்டில் தினமும் அவரது முகத்தைப் பார்ப்பதை நீங்கள் அனைவரும் எப்படி பொறுத்துக்கொண்டு பார்த்தீர்களோ ஆச்சரியமாக உள்ளது என்று தெரிவித்திருக்கிறார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X