ஜாங்கோ படத்தின் தமிழக வெளியீட்டு உரிமை.... கைப்பற்றிய பிரபல நிறுவனம்

சென்னை : தமிழ் சினிமாவில் முதல் முறையாக டைம் லூப் பாணியில் எடுக்கப்பட்டுள்ள படம் ஜாங்கோ.

படத்தை மனோ கார்த்திகேயன் எழுதி இயக்கியுள்ளார். ஜென் ஸ்டூடியோவுடன் திருக்குமரன் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து படத்தை தயாரித்துள்ளது.

இந்நிலையில் படத்தின் தமிழ்நாட்டு வெளியீட்டு உரிமையை பிரபல சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் தற்போது கைப்பற்றியுள்ளது.

ஜாங்கோ படம்

ஜாங்கோ படம்

அறிமுக இயக்குநர் மனோ கார்த்திகேயன் இயக்கத்தில் தமிழில் டைம் லூப் பாணியில் முதல்முறையாக எடுக்கப்பட்டுள்ள படம் ஜாங்கோ. சிவி குமாரின் திருக்குமரன் என்டர்டெயின்மெண்ட் மற்றும் ஜென் ஸ்டூடியோ இணைந்து இந்தாப் படத்தை தயாரித்துள்ளனர்.

இயக்குநர் மனோ கார்த்திகேயன்

இயக்குநர் மனோ கார்த்திகேயன்

இயக்குநர் அறிவழகனின் ஈரம் மற்றும் வல்லினம் ஆகிய படங்களில் உதவி இயக்குநராகவும் முண்டாசுப்பட்டியில் இணை இயக்குநராகவும் பணியாற்றியுள்ள மனோ கார்த்திகேயன், பாரதிராஜாவின் திரைப்படங்களே தன்னை சினிமாவுக்கு ஈர்த்ததாக தெரிவித்துள்ளார். சில குறும்படங்கள் மற்றும் ஆவணப்படங்களையும் இவர் இயக்கியுள்ளார்.

டைம் லூப் படம்

டைம் லூப் படம்

இந்நிலையில் ஒரே நாளில் நடக்கும் சம்பவங்கள் பற்றிய படமாக ஜாங்கோ உருவாகியுள்ளது. டைம் டிராவல் அடிப்படையிலான படங்கள் தமிழில் வெளிவந்துள்ள நிலையில் இந்தப் படம் டைம் லூப் அடிப்படையில் உருவாகியுள்ளது. ஒரே நாளில் மீண்டும் மீண்டும் நிகழும் நிகழ்வுகளை கொண்டு படம் உருவாகியுள்ளது.

ஜிப்ரான் இசை

ஜிப்ரான் இசை

படத்தில் அறிமுக நடிகர் சதீஷ்குமார் மற்றும் மிருணாளினி ரவி ஆகியோர் லீட் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிதா சம்பத், ஹரீஷ், வேலு பிரபாகரன், கருணாகரன், ரமேஷ் திலக் மற்றும் டேனியல் உள்ளிட்டவர்களும் படத்தில் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையில் ஹரிச்சரண் பாடியுள்ள அனலே பாடல் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழக வெளியீட்டு உரிமை

தமிழக வெளியீட்டு உரிமை

இந்நிலையில் படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். வரும் நவம்பர் 19ம் தேதி ரிலீசாக உள்ள இந்த திரைப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை பிரபல சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் தற்போது கைப்பற்றியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வரவேற்பை பெற்ற டீசர்

வரவேற்பை பெற்ற டீசர்

கடைக்குட்டி சிங்கம், விஸ்வாசம், எல்கேஜி, ஜாக்பாட், கோமாளி உள்ளிட்ட வெற்றிப் படங்களை வெளியிட்டுள்ளது சக்தி பிலிம் பேக்டரி. இந்நிலையில் ஜாங்கோ படத்தின் தமிழ்நாட்டு உரிமையை இந்நிறுவனம் கைப்பற்றியுள்ளது படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. படத்தின் டீசர் உள்ளிட்டவை வெளியாகி மிகச்சிறந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியுள்ள இந்தப் படம் ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை அளிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X