இப்படி ஒரு மனிதரை பார்த்ததே இல்லை.. பிரபாஸை ஏகத்துக்கும் புகழ்ந்து தள்ளும் ஸ்ருதி ஹாசன்!
சென்னை: பிரபல நடிகையான ஸ்ருதி ஹாசன் பிரபாஸை புகழ்ந்து தள்ளியுள்ளார்.
கே.ஜி.எஃப்' படங்களைத் தொடர்ந்து, பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகவுள்ள திரைப்படம் 'சலார்'.
'கே.ஜி.எஃப்' படங்களைத் தயாரித்த ஹொம்பாளே பிலிம்ஸ் நிறுவனமே இந்தப் படத்தையும் தயாரித்து வருகிறது.

முதல் முறையாக..
பிரபாஸ் லீடிங் ரோலில் நடிக்கும் இந்தப் படத்தின் பூஜை ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் பிரபாஸுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். இதன் மூலம் முதல் முறையாக ஸ்ருதிஹாசன் பிரபாஸுடன் இணைந்து நடிக்கிறார்.

ஏப்ரல் 14 ஆம் தேதி
இந்நிலையில், படத்தின் வெளியீட்டுத் தேதியைப் படக்குழு அண்மையில் அதிகாரபூர்வமாக அறிவித்தது. அதன்படி, அடுத்த ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி 'சலார்' திரைப்படம் வெளியாகும் என தெரியவந்துள்ளது.

ஸ்ருதி ஓபன்ஸ் அப்
இதனால் படப்பிடிப்பு படுவேகமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே பிரபாஸுடன் நடிக்கும் அனுபவங்களை நடிகை ஸ்ருதி ஹாசன் ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, இது ஒரு ஆக்ஷன் பேக்டு படம். நான் ஒரு ஷெட்யூல் ஷூட்டிங்கை முடித்து விட்டேன். இயக்குநர் பிரஷாந்த் நீல் பணிபுரிய ரொம்பவே அற்புதமானவர்.

டவுன் டூ எர்த்..
பிரபாஸ் குறித்து பேச வேண்டும் என்றால் தெலுங்கில் இதுவரை நான் பணியாற்றாத ஒரு நட்சத்திரம். அவர் ரொம்பவும் இணக்கமானவர். சில பேர் தங்களை டவுன் டூ எர்த் போன்று காட்டிக்கொள்வார்கள், ஆனால் அவர்தான் உண்மையிலேயே டவுன் டூ எர்த்.

நல்ல வைப்ஸ்
செட்டில் எப்போதும் பிரைட்டாகவும் நல்ல வைப்ரேஷன்களை கொண்டு வரும் ஒரு நபராகவும் இருந்து வருகிறார் என பிரபாஸ் குறித்து புகழ்ந்து பேசியுள்ளார் ஸ்ருதி ஹாசன். இருப்பினும் சலார் படத்தில் தனது கேரக்டர் குறித்து ஸ்ருதி எதுவும் பேசவில்லை.

எனக்கில்லை..
இருப்பினும் முழுக்க முழுக்க ஆக்ஷன் படமான இப்படத்தில் தனக்கு எந்த சண்டைக் காட்சியும் இருக்காது என்று பட்டும் படாமல் கூறியுள்ளார் ஸ்ருதி. மேலும் லாக்டவுனுக்கு பிறகு படப்பிடிப்புகள் தொடங்கி நடைபெற்று வருவதை பார்ப்பது தனக்கு மகிழ்ச்சி என்றும் கூறியுள்ளார் ஸ்ருதி ஹாசன்.


Click it and Unblock the Notifications











